• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விசாரணையைச் சந்திக்க ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கெடு.

July 20, 2016 தண்டோரா குழு

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர். 2014ம் ஆண்டு தானே மாவட்டத்தில் நடந்தப் பொதுக்கூட்டத்தில் பேசும் போது ஆர்.எஸ்.எஸ் எனப்படும் ராஸ்ட்ரிய சுயம் சேவாக் சங்க் என்ற அமைப்பைப் பற்றி அவதூறாக கருத்துத் தெரிவித்திருந்தார்.

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் கொலைக்கு RSS தான் காரணம். சர்தார் பட்டேலையும், மகாத்மா காந்தியையும் எதிர்த்தவர்கள் RSS அமைப்பினர். இப்போது அவர்களது ஆட்களே மகாத்மா காந்தியைப் பற்றிப் பேசுகிறார்கள் என கருத்துத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து ராஸ்ட்ரிய சுயம் சேவாக் சங்க் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கைத் தொடர்ந்தது.

அந்த அமைப்பு தொடுத்த அவதூறு வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என ராகுல் காந்தி மே மாதம் 2015ம் ஆண்டு உச்ச நீதி மன்றத்தில் மனு செய்தார்.

அவ்வழக்கு தற்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ராகுல் காந்தி தனது கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் அல்லது விசாரணையை எதிர் கொள்ளவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

RSS அமைப்பைச் சார்ந்த அனைவர் மீதும் ஒட்டுமொத்தமாகக் கரி பூசுவது ஏன் என்றும், முழு அமைப்பையும் குறை கூறுவது கண்டனத்திற்குரியது என்றும் நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

இக்கருத்துக்கள் அனைத்தும் சரித்திர உண்மைகள், அரசு ஆவணங்கள் அதற்குச் சான்றளிக்கும் என்று ராகுல் காந்தியின் சட்ட ஆலோசகர் நியாயப்படுத்தியுள்ளார்.

எனினும் ராகுல் காந்தியின் கருத்துக்களை மெய்ப்பிக்க வேண்டுமானால் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் அறிவித்தது.

தனது சட்ட ஆலோசகரான கபில் சிபில் வாதாட வரமுடியாத நிலையில் உள்ளதால் இரண்டு வாரங்கள் வழக்கை ஒத்திவைக்குமாறு ராகுல் காந்தி தரப்பில் விண்ணப்பிக்கப் பட்டபோது, அதை நீதிபதி மறுத்து ஜூலை 27ம் தேதி வழக்கை விசாரிக்க ஆணையிட்டார். மேலும் நீட்டிப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க