• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரச விருந்தில் பிரிட்டிஷ் இளவரசருக்கு கொலம்பியா அதிபர் தந்த வித்தியாசமான பரிசு

November 3, 2016 தண்டோரா குழு

கொலம்பியா நாட்டு அதிபர் ஜுவான் மேன்யுல் சான்டோஸ் பிரிட்டனுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு பிரிட்டிஷ் அரசி சார்பில் மிக ஆடம்பரமான அரசியின் வரவேற்பும் விருந்தும் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டன.

அப்போது, பிரிட்டிஷ் இளவரசர் பிலிப்புக்கு கொலம்பியா அதிபர் சான்டோஸ் வித்தியாசமான பேனாவைப் பரிசாக அளித்தார்.துப்பாக்கித் தோட்டாக்களைக் கொண்டு மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்பட்ட பேனாவைத்தான் அவர் அன்பாக அளித்தார்.இந்த வித்தியாசமான பரிசு, போரைக் கைவிட்டு, சமாதானத்தை மேற்கொள்வதை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.

கொலம்பியா அதிபர் சான்டோஸ் ஏற்கெனவே, ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு பரிசாக அளித்திருந்தார். அந்தப் பேனாவில், “தோட்டாக்கள் எங்கள் இறந்தகாலத்தை எழுதின. கல்வி எதிர்காலத்தை எழுதும்” எனப் பொறிக்கப்பட்டுள்ளது.

கொலம்பியா அதிபர் சான்டோஸ் கடந்த மாதம் அமைதிக்கான நோபல் பரிசை வென்றார். உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்ததை உலகமே பாராட்டும் விதத்தில் இந்தப் பரிசு வழங்கப்பட்டது.

கொலம்பிய அதிபர் ஜுவான் மேன்யூல் சான்டோஸ், அவரது மனைவி மரியா க்லெமென்சியா ரோட்ரிகோ ஆகியோருக்கு பிரிட்டிஷ் அரசவை சார்பில் ஆடம்பரமான வரவேற்பு செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

அதில் பங்கேற்ற அரசி எலிசபெத் நீலமணிக் கல்லையும், வைரம் பதித்த தலைப்பாகையையும் அணிந்திருந்தார். இவற்றை அவர் 1960ம் ஆண்டுகளில் வாங்கினார். இது தவிர, எடின்பரோ கோமகனுடன் அவருக்குத் திருமணம் நடந்தபோது அளிக்கப்பட்ட நெக்லஸ், காதுத் தோடு ஆகியவற்றையும் அணிந்து அசத்தினார்.

எலிசபெத் அரசியுடன், இளவரசர்கள் பிலிப், சார்லஸ், கமீலா பார்க்கர் விருந்தில்
பங்கேற்றனர்.கொலம்பியா அதிபரும் அவரது மனைவியும் பக்கிங்ஹாம் மாளிகையில் ஓரிரு தினங்கள் தங்கியிருப்பர்.இளவரசர் சார்லஸும், அவரது மனைவி கமீலாவும் கொலம்பியா நாட்டுக்கு இரு ஆண்டுகளுக்கு முன் பயணம் மேற்கொண்டனர்.

மேலும் படிக்க