• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடை பாதையில் வாழும் பஞ்சாப் முன்னாள் MLA.

June 24, 2016 தண்டோரா குழு

பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பஞ்சாபைச் சேர்ந்த ஷிங்கார ராம் ஷஹுங்க்ர.

அவருடைய இன்றைய வீடு கர்ஷங்கர் நகரத்தின் வீதியோரத்து நடைபாதை தான். மழை பெய்தால், நீர் புகாத கித்தானைத் தேடி இவரது குடும்பம் அலைபாயும். ஈரமான தரையிலிருந்து பாதுகாப்பிற்காக இரும்புக் கட்டிலை உபயோகிக்கும் குடும்பம் இரண்டு முறை சட்ட பேரவை உறுப்பினராக இருந்த ஷஹுங்க்க்ர குடும்பம்.

பதவி வகிக்கும் சட்டப் பேரவை உறுப்பினர்களே அரசு பங்களாக்களில் வசிக்கலாம். பழைய உறுப்பினர்கள் புதியவர்களுக்கு வழி விட வேண்டும்.

தனது பதவி போன பிறகும் தான் வசித்த வீட்டைக் காலி செய்யாமல் பல வருடங்கள் சட்டத்திற்குப் புறம்பாக வசித்து வந்தார். 2005ம் ஆண்டு தொடங்கிய இம்முயற்சி தற்போது தான் மஜிஸ்ரேட் மற்றும் காவலர் உதவியோடு முற்றுப் பெற்றது என்று காந்தி கனல் எக்ஸிக்யூடிவ் விஜய்கில் கூறினார்.

தலைவர் கன்ஷி ராம் மேற்கொண்ட பணியான தாழ்த்தப்பட்ட மக்களின் அதிகாரத்தை நிலைநிறுத்துவது என்ற பணியைத் தொடரவே தான் அரசியலில் புகுந்ததாக ஷஹுங்க்க்ர கூறியுள்ளார். தன்னுடைய இந்த நிலைக்குக் காரணம் எந்த ஊழலிலும் ஈடுபட்டு பணம் சம்பாதிக்காததே என்றும் கூறினார். தலைவர் கன்ஷிராமிற்கு உதவி

செய்ய முனைந்ததற்காகக் கட்சியில் இருந்து தான் வேளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.

நடைபாதையில் தன் மனைவி சமைக்க மகன்கள் உதவி செய்ய அண்டைவீட்டாரின் கழிப்பறையை உபயோகிக்க வேண்டிய அவலம் இவருக்கு ஏற்பட்டதற்குக் காரணம் தான் குறுக்குவழியில் பணம் ஈட்டாததே. அன்றும் தன்னுடைய சம்பளம் போதுமானதாக இருந்ததில்லை, இன்று தன்னுடைய MLA உதவித்தொகை போதுமானதாக இல்லை என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

தான் ஒரு வாடகை வீட்டை தேடிக் கொண்டிருப்பதாகவும் அதுவரையில் வானமும், பூமியுமே தன் வீடு என்றார்.

இவருடைய ஒரு சகோதரர் கட்டிடத்தொழிலாளி. மற்றொருவர் கிரீஸ்ல் உள்ள ஒரு சாதாரணத் தொழிலாளி. இருவராலும் அவரவர்களுக்கு என ஒரு வீடு வைத்துள்ளனர்.

ஆனால் அரசு பதவியில் இருந்த தன்னால் அத்தியாவசியத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய இயலவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க