• Download mobile app
22 Mar 2026, SundayEdition - 3693
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாலையில் எச்சில் துப்பினால் அவர்களே சுத்தம் செய்யும் நூதன தண்டனை!

November 12, 2018 தண்டோரா குழு

சாலைகளில் எச்சில் துப்பினால் அதனை அவர்களே சுத்தம் செய்ய வேண்டும் என புனே மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.மகாராஷ்டிர மாநிலம் புனே நகரை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க அந்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இனி பொது இடத்தில் யாரேனும் எச்சில் துப்பினால் அவர்களே அதனை சுத்தம் செய்துவிட்டுத்தான் அங்கிருந்து செல்ல வேண்டும் என்ற புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.அந்த உத்தரவில் பொது இடத்தில் யாரேனும் எச்சில் துப்பினால் அவர்களே சுத்தம் செய்துவிட்டு அத்துடன் அபராதமாக 150 ரூபாய் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளது.

மேலும்,மாநகராட்சியின் கண்காணிப்பில் இதுவரை கடந்த 8 நாட்களில் 156 பேர் சிக்கியுள்ளனர்.அவர்கள் துப்பிய எச்சலை அவர்களே சுத்தம் செய்துவிட்டு ரூ.150 அபராதமும் செலுத்திவிட்டுச் செல்கின்றனர்.இந்த நூதன தண்டனை மக்கள் சாலையை தூய்மையாக வைத்துகொள்ளவும் விழிப்புணர்வுக்காக மட்டுமே என்றும் மாநகராட்சி கூறியிருக்கிறது.புனே மாநகராட்சியின் இந்த நூதன முயற்சி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் படிக்க