• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

5 ஆண்டுகள் நிலையான ஆட்சியை தருவேன் – நாராயணசாமி நம்பிக்கை

October 21, 2016 தண்டோரா குழு

புதுச்சேரி நெல்லிதோப்பு சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று 5 ஆண்டுகள் நிலையான ஆட்சியை தருவேன் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நவம்பர் 19ம் தேதி புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்கு தேர்தல் நடக்க உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது. இதனையடுத்து இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று தனது பிரசாரத்தை துவக்கினார்.

பிரசாரத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

புதுச்சேரி மக்கள் நான் தற்போது மேற்கொண்டு வரும் ஆட்சியின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் . நெல்லித்தோப்பு தொகுதியில் வெற்றி பெற்று, 5 ஆண்டுகள் நிலையான ஆட்சியை தருவேன்.

பிரச்சாரம் செய்வதற்காக காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் முகுல்ராய், குலாம்நபி ஆசாத் ஆகியோர் புதுச்சேரி வர உள்ளனர்.திமுக பொருளாளர் மு க ஸ்டாலினும் எனக்காக பிரசாரம் செய்ய புதுச்சேரி வர உள்ளார்.

வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு முடிவு செய்யப்படும் என கூறினார்.

மேலும் படிக்க