• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் இந்து அல்ல – பிரகாஷ்ராஜ்

January 18, 2018 தண்டோரா குழு

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் இந்து அல்ல யார் இந்து என்பதை பாரதிய ஜனதா முடிவு செய்ய முடியாது என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

ஐதராபாத்தில் இந்தியா டுடே சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், எந்த திரைப்படமும் இந்துக்களுக்கு எதிரானது இல்லை. ஆனால், அவை இந்துகளுக்கு எதிரானதாக சித்தரிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் பாஜகவை சேர்ந்த ஒருவர் நான் இந்துகளுக்கு எதிரானவன் எனக் கூறினார். நான் இந்து மதத்திற்கு எதிரானவன் அல்ல, மோடி, அமித்ஷா, ஹெக்டேவிற்கு எதிரானவன். என்னை இந்துக்களுக்கு எதிரானவன் என்று கூறும் அவர்கள் இந்துகளே இல்லை. பிரதமர் மோடியும், அமித்ஷாவும் இந்து அல்ல.யார் இந்து என்பதை பாரதிய ஜனதா முடிவு செய்ய முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க