• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தாயின் மனதை சோனியா காந்தி புரிந்து கொள்வார்:பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்

November 16, 2017 தண்டோரா குழு

தாயின் மனதை சோனியா காந்தி புரிந்து கொள்வார் என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் பேரறிவாளன். முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இடையில், பேரறிவாளனின் தந்தை குயில்தாசனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவருக்கு 2 மாதங்கள் பரோல் வழங்கப்பட்டது.

இதையடுத்து பரோல் காலம் முடிவடைந்து பேரறிவாளன் சிறை சென்றுவிட்டார். இந்நிலையில், தன்னை இந்த தண்டனையிலிருந்து விடுவிக்கும்படி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதனிடையே பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்த பெஞ்சில் இருந்த நீதிபதி தாமஸ் கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் குற்றவாளிகள் 7 பேரும் சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசு 2014-இல் கொண்டு வந்த தீர்மானத்தை அப்போதைய மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அந்த வழக்கானது தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆயுள் தண்டனைக்கு மேல் சிறையில் நீண்ட காலமாக சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு நீங்களும், ராகுலும்,முடிந்தால் பிரியங்காவும் கடிதம் எழுத வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்,

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒவ்வொரு உண்மையாக வெளிச்சத்திற்கு வருகிறது.வாக்குமூலம் பெற்ற அதிகாரி, தீர்ப்பளித்த நீதிபதி கூறிய பிறகும் பேரறிவாளன் சிறையிலிருப்பது வேதனையளிக்கிறது. பேரறிவாளனை விடுவிக்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும்.பேரறிவாளனை விடுவிக்க கோரிய ஓய்வு பெற்ற நீதிபதி தாமஸூக்கு நன்றிதெரிவித்துக்கொள்கிறேன். ஒரு தாயாக சோனியா காந்தி எனது உணர்வுகளை புரிந்து கொண்டு தனது மகனை விடுவிப்பார் என்று நம்புகிறேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க