• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தபால் தலையில் இனி தனி நபரும் உலா வரலாம்.

July 2, 2016 தண்டோரா குழு

பொதுவாகத் தபால்தலையில் புகழ்பெற்ற தியாகிகள், வீரர்கள், போன்றவர்களுடைய உருவங்கள் அல்லது முக்கிய நிகழ்ச்சிகளின் பதிவுகள் இடம்பெறும்.

தற்போது தேவைப்பட்டவர்கள் தங்களது புகைப்படத்தையோ, அல்லது நிறுவனத்தின் சின்னத்தையோ தபால் தலையில் பொறிக்கும் படிச் செய்யலாம் என்று தபால் துறை அறிவித்துள்ளது. இதற்கு அவர்கள் 12 லட்சம் பணம் கட்டினால் போதும் என்று கூறியுள்ளது. திருத்தியமைக்கப்பட்டு அச்சிடப்பட்ட இத்தபால் தலைகள் 5,000 பக்கங்களில் 60,000 காணப்படும்.

My Stamps எனப்படும் இவை தனிப்பட்ட நபர்களாலும், மற்றும் நிறுவனங்களாலும் உபயோகப்படுத்தப் படலாம் என்று தபால் துறை செயலர் S.K. சின்ஹா கூறியுள்ளார். புகைப்படங்களை அச்சிட அனுமதிக்கும் முன் அந்த நபரது பின்னணி பற்றி தீவிர விசாரித்த பின்னரே அனுமதி அளிக்கப்படும் என்று சின்ஹா தெரிவித்துள்ளார்.

முன்பு, தபால்துறை வழக்கமான ஸ்டாம்புகளைத் தவிர 300ரூபாய் முத்திரைத்தாள்களில் புகைப்படங்களோ அல்லது ஏதாவது வடிவமைப்போ அச்சிட அனுமதித்திருந்தது. இவை பொதுவான தபால் அஞ்சலுக்கு உபயோகப்படுத்தப்பட்டிருந்தது.

தற்போது தபால்துறை இத்தகைய மை ஸ்டாம்ப்களை மின்வணிக நிறுவனங்களான அமேஸான் இந்தியா, ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடட் போன்ற நிறுவனங்களுக்கு உபயோகப்படுத்த அளித்துள்ளது. கல்வி நிறுவனங்களிடமிருந்தும் வேறு பல நிறுவனங்களிடமிருந்தும் வரும் விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்கிறது.

வெஸ்டன் யூனியன், SNDTவுமன் யுனிவர்ஸ்டி, அலகாபாத் உயர்நீதிமன்றம் போன்ற மையங்களுக்கு மை ஸ்டாம்ப் அச்சிட்டுக் கொடுப்பதைப் பற்றியும் பரிசீலித்து வருகிறது. சென்ற வருடம் இதன் மூலம் 2.83 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. இந்த வருடமும் இதுவரை 2 கோடி ரூபாய்க்குத் திட்டங்கள் உள்ளன என்றும் சின்ஹா கூறியுள்ளார்.

தபால் தலை சேகரிப்பவர்கள் வாயிலாகவும் மை ஸ்டாம்ன் வருவாயைக் அதிகரிக்க முயன்று வருகிறது. இந்த வருடம் கிட்டத்தட்ட 15,000 முதல் 16,000 கோடி ரூபாய் வசூலை எட்ட வேண்டும் என்று தபால் துறை திட்டமிட்டுள்ளது. கல்வி நிறுவனங்களின் மூலமாகவும் தபால்தலை சேகரிப்பவர்களை ஊக்குவிக்கலாம். 6 வது 7 வது வகுப்புகளின் பாடத்திட்டத்தில் இதைச் சேர்க்க மனிதவள மேம்பாட்டு மையத்தை வலியுறுத்தப் போவதாகவும் கூறியுள்ளார்.

கடிதப் பெட்டிகளில் பார் கோட் அமைப்பதன் மூலம், கடிதப் பெட்டிகளை யார், எங்கே எப்போது கையாளுகிறார்கள் என்ற விஷயங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளமுடியும். வருகின்ற, போகின்ற கடிதங்களின் எண்ணிக்கையையும் துல்லியமாக கணக்கிடமுடியும்.

இதுவரை சில குறிப்பிட்ட மாநிலங்களில் அறிமுகப் படுத்தப்பட்ட இந்த பார்கோட் முறை இந்தியா முழுவதும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

5,500 கோடி ரூபாய் நிதிப் பற்றாக்குறை இருந்த தபால் துறை இன்னும் சில வருடங்களில் நிர்யணித்த இலக்கை எட்டும் என்றும் சின்ஹா உறுதி படக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க