• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அப்துல் கலாம் வீட்டில் இருந்து அரசியல் பயணம் தொடக்கம் – கமல்

January 18, 2018 தண்டோரா குழு

பிப்ரவரி 21ஆம் தேதி அப்துல் கலாம் வீட்டில் இருந்து நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார்.

நடிகர் கமல்ஹாசன் பிப்.21ம் ஆம் தேதி  தனது அரசியல் பயணத்தை தொடங்குவதாகவும் அன்றைய தினம் கட்சியின் பெயரை அறிவிக்க போவதாகவும் அறிவித்தார். இதற்கிடையில் பிரபல வார இதழில் நடிகர் கமல்ஹாசன் எழுதும் தொடரில் தனது அரசியல் பயணம் குறித்து தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், இந்த வார இதழில், திராவிடம் என்பது தமிழ்நாடு தழுவியது மாத்திரம் அல்ல; நாடு தழுவியது. மிகப்பெரிய சரித்திரமும் ஆந்த்ரோபாலஜியும் தொல்பொருள் ஆராய்ச்சியும் திராவிடத்தில் உள்ளது. என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிப்ரவரி 21ஆம் தேதி ராமேஸ்வரம் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்குவதாகவும் இதற்கு காரணம், கலாமிற்கு பல கனவுகள் இருந்தன, அவரை போல பல கனவுகளை கொண்டவன் தான் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார். இதுமட்டுமின்றி விமர்சிப்பது மட்டுமே என் வேலையன்று, நான் இறங்கி வேலை செய்ய வந்தவன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க