• Download mobile app
06 Aug 2026, ThursdayEdition - 3830
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாதுகாப்பு பணியின்போது செல்போன் பயன்படுத்த காவலர்களுக்கு தடை : டிஜிபி அலுவலகம் சுற்றறிக்கை

November 26, 2018 தண்டோரா குழு

பாதுகாப்பு பணியின்போது செல்போன் பயன்படுத்த காவலர்களுக்கு தடை விதித்து டிஜிபி அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.பணியில் ஈடுட்டிருப்பவர்கள் அதிகஅளவு நேரத்தினை தங்களதுசெல்போனில் வாட்ஸப்,பேஸ்புக் உள்ளிட்ட சமூக தளங்களில் நேரம் செலவிடுவதாக பரவலாக புகார்கள் தமிழகஅரசுக்கும், காவல்துறை தலைமைக்கும் சமீப காலங்களில் வந்து சேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து,காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடைவிதித்து டிஜிபி அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில்,

“முக்கியமான நேரங்களில் காவலர்கள் செல்போனில் மூழ்கி உள்ளனர்.உதவிஆய்வாளர் பதவிக்குமேல் உள்ளவர்கள் மட்டும் பணிநிமித்தமாக செல்ஃபோன் பயன்படுத்தலாம்.சட்டம் ஒழுங்கு,விவிஐபி,கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட எந்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் போதும் செல்ஃபோன்களை பயன்படுத்தக்கூடாது.செல்ஃபோன் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது,தடை விதிப்பது தொடர்பாக அந்தந்த பிரிவு அதிகாரிகள் முடிவெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் பாதுகாப்பு பணியிலுள்ள காவலர்கள் செல்ஃபோன் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடுகள் வந்துள்ளன”.

மேலும் படிக்க