• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறையில் காவலர்கள் தாக்கினர். பியூஸ் மனுஷ் கண்ணீர் பேட்டி.

July 22, 2016 தண்டோரா குழு

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இயற்கை ஆர்வலர் பியூஸ் மானுஷ் நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். மேலும், சிறையில் தன்னை காவலர்கள் கடுமையாக தாக்கியதாக பியூஸ் மனுஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

இயற்கை செயல்பாட்டாளர் பியூஸ் மனுஷ் சேலம் மாநகரின் முக்கிய பகுதியான முள்ளுவாடி கேட் பகுதியில் ரயில்வே மேம்பால கட்டுமான பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி கடந்த 8ம் தேதி அவரது நண்பர்கள் கார்த்தி, முத்துசெல்வம் ஆகியோருடன் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் பியூஸ் மானுஷ் உட்பட மூவருக்கும் ஜாமின் வழங்குமாறு கடந்த வாரம் சேலம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் மற்ற இருவருக்கும் ஜாமின் அளித்த நீதிபதி, பியூஸ் மானுஷுக்கு ஜாமின் வழங்கவில்லை.

இந்தநிலையில், பியூஸ் மானுஷின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என அவரது மனைவி மோனிகா நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சேஷாயி, பத்தாயிரம் ரூபாய் பிணைத்தொகையுடன் மூன்று வாரங்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து சேலம் மத்திய சிறையிலிருந்து பியூஷ் மானுஷ் விடுதலை செய்யப்பட்டார்.

சிறை வளாகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த மனுஷ், சிறையில் தன்னை 30 காவலர்கள் கண்மூடித்தனமாக தாக்கியதாகக் கண்ணீர் மல்கக் குற்றம் சாட்டினார்.

மேலும், தற்போது சிறைத்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகக் கூறிய பியூஸ் மானுஷ், தமக்கு நேர்ந்த கொடுமை வேறு யாருக்கும் நேரக் கூடாது என்றும் கண்ணீர் மல்கத் தெரிவித்தார். அவர் இது குறித்த அனைத்து விபரங்களையும் கூடிய விரைவில் வெளியிடுவேன் என்றும், என் சமூக பணிகளை நான் எப்போதும் போல் தொடருவேன் என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க