ஒரு குழந்தையை தன் கருவில் சுமக்கும் போது, அது ஆண் பிள்ளையென்றால் கடவுளின் பெயர் அல்லது தங்கள் மூதாதையோரின் பெயரைத் தேர்ந்தெடுப்பர் பெண் குழந்தை என்றால் அதற்கு ஏற்றப் பெயரை தேர்ந்தெடுப்பர். சிலர் குழந்தையின் பெயர் அழகான அர்த்தம் என்னவென்று பார்த்து பார்த்து பெயரை தேர்வு செய்வதை வழக்கமாகக் கொண்டு இருந்தனர்.
ஆனால் தற்போது போகிமான் கோ விளையாட்டின் கதாப்பாத்திரங்களின் பெயர்களை தங்களது குழந்தைகளுக்குச் சூட்ட அமெரிக்க பெற்றோர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதாக சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் இன்னும் சில வருடங்களில் உங்களிடம் அறிமுகமாகும் குழந்தைகளின் பெயர்கள் போகிமான் கோ விளையாட்டில் வரும் கதாப்பாத்திரங்களை நினைவுபடுத்தினால் ஆச்சரியப்படுவதில் ஒன்றும் இல்லை.
ஏனெனில், அமெரிக்காவில் தற்போதைய நிலவரத்தின்படி வாஷிங்டனில் அமைந்துள்ள பெரும்பான்மையான குழந்தை நலக்காப்பகத்திலும், குழந்தை வளர்ப்பு தொடர்பான வலைத்தளங்களிலும் போகிமான் கோ விளையாட்டின் கதாப்பாத்திரங்களின் பெயர்களான பிக்காச்சூ, ஒனிக்ஸ், ரூசிலியா, ஈவேய், ஆஷ் ஆகிய பெயர்களை போட்டி போட்டு கொண்டு முன்பதிவு செய்து வருகின்றன.
இந்த போகிமான் கோ வின் விளையாட்டில் வரும் பெண் கதாப்பாத்திரங்களான ரூசிலியா, ஈவேய், பெயர்கள் தற்போது சற்று முன்னிலையில் உள்ளன.
இதுகுறித்து பேசிய வாஷிங்டனை சேர்ந்த குழந்தை நலக் காப்பகத்தின் நிறுவனர் லிண்டா முர்ரே, அமெரிக்க பெற்றோர்களின் போகிமான் கோ விளையாட்டு மீதான மோகம் என்பது புதியதல்ல. சுமார் 90களில் வந்த கார்ட்டூன் கதாப்பாத்திரங்களின் பெயர்களுக்கு இம்மாதிரியான வரவேற்பை அமெரிக்க பெற்றோர்கள் கொடுத்துள்ளனர் என்று தெரிவித்தார்.
கோவையில் தேசிய அளவிலான மிகப்பெரும் குதிரையேற்ற லீக் போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது
‘புதிய வேளாண் காடுகள் விதிகள்’ – நம் மண்ணைக் காக்கும் பெரும் சீர்திருத்தம் என சத்குரு வரவேற்பு
” ஷேமா கிசான் சாத்தி “திட்டத்தை வழங்குவதற்கு கரூர் வைசியா பேங்க் மற்றும் ஷேமா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் கூட்டாண்மை
கோவை பிஎஸ்ஜி மருத்துவமனை மருத்துவர்கள் தினத்தை கொண்டாடியது
கதைகள் நன்றாக இருந்தாலே படத்தை தானாக மக்கள் அங்கீகரிப்பார்கள் – நடிகர் அருண் பாண்டியன்
தென்னிந்தியாவில் தனது வணிக நெட்வொர்க்கை மேலும் விரிவுபடுத்துகிறது ஆர்.எஸ்.டபிள்யூ.எம். நிறுவனம்