• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிளாஸ்டிக் கூடையில் வாழும் பெண்

July 26, 2016 தண்டோரா குழு

நைஜீரியாவின் கானோவைச் சேர்ந்தவர் ரஹ்மா ஹருனா. பிறந்த 6 மாதத்தில் வாதநோயால் பீடிக்கப்பட்டதால் கைகளும், கால்களும் வளராமல் ஊனமாகவே 19 ஆண்டுகளாகத் துயரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

காய்ச்சலில் தொடங்கி, வயிற்றுவலி, கால்வலி, கைவலி, உடல் வலி எனப் பரவி ரஹ்மாவை முழுவதும் முடக்கிவிட்டது என்று அவரது தாய் வாடி தெரிவித்தார்.

முற்றிலும் மற்றவரின் துணையோடுதான் வாழவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார் ரஹ்மா. அவரது சகோதரர் ஃபஹட், குளிக்க வைப்பதிலிருந்து அனைத்து உதவிகளையும் அன்போடு செய்வதும், தாய் அவரை ஒரு பிளாஸ்டிக் கூடையில் வைத்து எங்குச் செல்லும்போதும் தூக்கிச்செல்வதும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அவர் மீது வைத்துள்ள அன்பிற்கு உதாரணமாகும்.

மற்றவர் ரெஹ்மாவிற்கு உதவிகள் செய்யும் போது தான் பெரும் மகிழ்ச்சியடைவதாகவும், உறவினர்களைச் சந்திப்பதில் ரெஹ்மா மகிழ்ச்சியடைவதாகவும், பல சிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டிருந்தாலும், மூல காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அவரது சகோதரர் கருத்துத் தெரிவித்தார்.

இஸ்லாமிய புராணங்களில் கூறப்படும் அமானுஷ்ய சக்தி போன்ற ஏதோ பீடித்திருக்கலாம் என்றும் சிலர் தெரிவித்தனர். ரெஹ்மாவின் குடும்பத்தினர் அனைவரும் இவரது நோயைக் குணப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

இவரது தந்தை ஹுச்சைனி அவரது உடமைகள் அனைத்தையும் விற்று 15 வருடங்களாகச் சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். இதுவரை ஒரு மில்லியன் நைரா வரை செலவு செய்திருப்பதாகவும், தொண்டு நிறுவனங்களை உதவிக்கு அணுகியுள்ளதாகவும், சிறந்த மருத்துவ நிபுணர்களின் அறிவுரையை அனுகவிருப்பதாகவும் கூறியுள்ளார்.

உதாரகுணம் படைத்த பலரும் பலவித உதவிகளை ரெஹ்மாவிற்கு அளிக்க முன்வந்துள்ளனர். எளிதாகப் பயணம் செய்யும் வண்ணம் ஒரு சக்கரநாற்காலியை ஒருவர் வழங்கியுள்ளார்.

எத்தனை வலிகள் இருந்த போதும், தனது லட்சியத்தை உறுதியாக அடைய ரெஹ்மா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.

மக்கள் அனைத்துப் பொருட்களையும் வாங்க வசதியாக ஒரு மளிகைக்கடை துவங்குவதே இவரது லட்சியம். மனதில் உறுதியிருந்தால் வானத்தையும் வளைக்கலாம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.

மேலும் படிக்க