November 13, 2017
தண்டோரா குழு
பரோல் முடிந்து முதன் முறையாக பேரறிவாளன் உடல் பரிசோதனைக்காகவும் சிறுநீர் தொற்று பிரச்சனைக்காகவும் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டார்.
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் சிறை தண்டனை பெற்று வரும் பேரறிவாளனுக்கு கடந்த சில வருடங்களாக சிறுநீர் தொற்று நோய் உள்ளது. அதனால் மாதத்திற்கு ஒரு முறை மருத்துவனைக்கு அழைத்துவரப்படுவார். இந்தநிலையில் தமிழக அரசு உத்தரவின் பேரில் இரண்டு மாத பரோலில் சென்றபோது வீட்டிலையே மருத்துவ சிகிச்சை பெற்றார்.பின்னர் பரோல் முடிந்து கடந்த மாதம் 24 தேதி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று பரோல் முடிந்து முதன் முறையாக பேரறிவாளன் உடல் பரிசோதனைக்காகவும் சிறுநீர் தொற்று பிரச்சனைக்காகவும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டார். பின்னர் மருத்துவர் முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பின் அவருக்கு ரத்த பரிசோதனை,சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துசெல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.