July 28, 2016
தண்டோரா குழு
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புல்லூர் கிராமத்தில் பாலாற்றில் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை உயரத்தை அதிகரித்து வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாகப் பெய்து வரும் மழையின் காரணமாக நீர் வரத்து அதிகரித்து இந்தத் தடுப்பணை நிறைந்து வருகிறது.

இதற்கு முன்பு இருந்த தடுப்பணை அளவிற்கு தற்போது நீர் நிறைந்துள்ளது. இதுவே பழைய தடுப்பணையாக இருந்தால் இந்நேரம் தமிழகத்திற்கு நீர் வந்திருக்கும். ஆனால் தற்போது இந்தத் தடுப்பணை உயர்த்திக் கட்டப்பட்டதால் மேலும் நீர் வரத்து வந்தால் மட்டுமே தமிழகத்திற்கு நீர் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை அடைந்து வருகின்றனர்.