October 27, 2017
தண்டோரா குழு
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நாயகன் தல அஜித். அவரது திரைப்படம் குறித்த அறிவிப்பு முதல் போஸ்டர் வரை வெளியானால் தல ரசிகர்கள் உற்சாகமாகிவிடுவார்கள்.
இந்நிலையில், பிரபல ஆங்கில அகராதியான ஆக்ஸ்போர்ட் டிஷ்னரியில் புதிதாக பல வார்த்தைகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் ‘அண்ணா’ என்ற தமிழ் வார்த்தை அதில் இடம் இடம்பெற்றது. அதற்கு மூத்த சகோதரர் என்று அர்த்தம் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து அதற்கு உதாரணமாக விவேக் ஓப்ராய் ஒரு பேட்டியில் கூறிய ” ஐ காட் டு ஆக்ட் வித் அஜித் அண்ணா” என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.இதனையடுத்து அஜித்தின் பெயர் ஆகஸ்போர்ட் டிஷ்னரியில் இடம்பெற்றிருப்பது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.