• Download mobile app
07 May 2026, ThursdayEdition - 3739
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் !

October 19, 2016 தண்டோரா குழு

முதலமைச்சர் பங்கேற்காத நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல் முறையாக நிதியமைச்சரான ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் தலைமை செயலகத்தில் புதன்கிழமை காலையில் நடைபெற்றது.

ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சர் பொறுப்பில் இருந்தபோது, அமைச்சரவைக் கூட்டங்கள் நடைபெற்றிருக்கலாம். ஆனால், அவர் முதலமைச்சராக ஜெயலலிதா இருக்கும் நிலையில், அவர் உடல்நலம் இல்லாத சூழலில் மூத்த அமைச்சரும் அவை முன்னவருமான ஓ.பி.எஸ். தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

உடல்நலக் குறைவு காரணமாக தமிழக முதலமைசர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 20 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்களின் தீவிர கண்கானிப்பில் உள்ள ஜெயலலிதா மருத்துவமனையில் நீண்ட நாட்கள் ஒய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக முதலைமச்சர் நலமடைந்து பணிக்குத் திரும்பும் வரை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் கவனித்து வந்த துறைகளைக் கவனிப்பார் எனவும், அமைச்சரவைக் கூட்டத்திற்கும் அவரே தலைமை வகிப்பார் எனவும் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என தொடர்ந்து எதிர்கட்சிகள் கூறிவந்த நிலையில் இன்று தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டம் ஒரு மணி நேரம் வரை நீடித்தது.

மேலும், இக்கூட்டத்தில் காவிரி நீரை வழங்க தொடர்ந்து மறுத்து வரும் கர்நாடக அரசின் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், அதிகாரிகள் நியமனம் குறித்தும் ஆலோசனை நடத்தப் பட்டதாகவும், முதலீட்டாளர் மாநாட்டில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, முதலீட்டாளர்களுக்கு தொழில் தொடங்க நிலம் ஒதுக்கித் தருவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தலைமை செயலாக வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் படிக்க