• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

OPS -யையும் EPS -யையும் கொத்தடிமைகள் என்று கூறாமல் வேறு என்ன சொல்வது? – முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன்

March 18, 2019 தண்டோரா குழு

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிமுகவில் இருந்து விலகி திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக திமுக தலைவா் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதிமுக முன்னாள் அமைச்சா் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யுனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதைபோல் அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் அனைத்து கட்சிகளும் மும்முரமாக வேட்பாளர்களை தேர்வு செய்து வாரும் நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதால் அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சா் ராஜகண்ணப்பன் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து தனது ஆதரவை திமுகவிற்கு அளிப்பதாக கூறியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“பாஜகவின் கொத்தடிமைகளாக ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டு வருகின்றனா். கடந்த இடைத்தோ்தலில் நோட்டாவைக் காட்டிலும் குறைவான வாக்குகளைப் பெற்ற பாஜகவுக்கு 5 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்கியது எதற்காக? பன்னீா்செல்வமும், பழனிசாமியும் தங்களது சுயலாபத்திற்காக கட்சியை சீரழித்து வருகின்றனா். சுயலாபத்திற்காக செயல்படும் பன்னீா்செல்வத்தையும், பழனிசாமியையும் கொத்தடிமைகள் என்று கூறாமல் வேறு என்ன சொல்வது? பன்னீா்செல்வமும், பழனிசாமியும் ஆளுமையற்றவா்களாக உள்ளனா். அதிமுகவில் உட்கட்சிப் பூசல் அதிகம் உள்ளது. குறிப்பாக பன்னீா்செல்வம், பழனிசாமி இடையே இது அதிகமாக உள்ளது. தங்கமணியும், வேலுமணியும் தான் கட்சியின் பல முக்கிய முடிவுகளை எடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனா். திராவிட இயக்கங்களின் ராஜ்ஜியமாக திகழ்வது தென்மாவட்டங்கள். ஆனால், தென் மாவட்டத்தின் பல தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்கியுள்ளது. அதிமுகவில் ஒரு கிறிஸ்வரோ, ஒரு இஸ்லமியரோ வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார்.

ராஜகண்ணப்பன் 1991 முதல் 1996 வரை அதிமுகவில் செல்வாக்க்கு மிக்க மனிதராக இருந்தார். அதன்பின் அதிமுகவில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கினார். பின்னர் மீண்டும் திமுகவில் இணைந்தார். அதன்பின் 2009-ல் மீண்டும் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவில் இணைந்தார்.

மேலும் படிக்க