• Download mobile app
06 Aug 2026, ThursdayEdition - 3830
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீதிமன்ற உத்தரவையும் மீறி இணையதளத்தில் வெளியானது 2.0 திரைப்படம்

November 29, 2018 தண்டோரா குழு

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது.லைகா தயாரிப்பில் ரூ.500 கோடி பட்ஜெட்டில் அக்சய் குமார்,எமிஜாக்சன் நடிப்பில் இந்தியாவின் பெருமைமிகு படமாக 2.0 உருவாகி உள்ளது.இப்படம் உலகம் முழுக்க வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இதற்கிடையில்,தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 12 ஆயிரத்து 567 இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களில் 2.0 படத்தை வெளியிட தடை விதிப்பதாக உத்திரவிட்டது.

இந்நிலையில்,சமீபகாலமாக ஒவ்வொரு படங்களையும் சவால் விட்டு வெளியிட்டு வரும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் நீதிமன்ற உத்தரவையும் மீறி படங்களை திருட்டுத்தனமாக ஆன்லைனில் 2.0 படத்தை வெளியிட்டு படக்குழுவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளன.இதனால் இந்த இணையதளம் மீது நடவடிக்கை எடுக்கும்படி ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கையை விடுத்து வருகிறார்கள்.சர்கார் படம் வெளியான சில மணி நேரங்களிலேய தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிடப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க