November 27, 2026
தண்டோரா குழு
KG குழுமத்தின் ஓர் அங்கமான TNCD நிறுவனம், கோவை தடாகம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள தனது புதிய உயர்மாடிக் குடியிருப்புத் திட்டமான ‘அட்லாண்டிக் சிட்டி’யை அறிமுகப்படுத்துகிறது. இதற்கான அறிமுக விழா நவம்பர் 27 முதல் 29 வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
இத்திட்டத்தில் 1, 2 மற்றும் 3 BHK வகைகளில் மொத்தம் 178 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. திட்டம் அறிமுகமாவதற்கு முன்பே அனைத்து 1 BHK வீடுகளும் விற்பனையாகியுள்ள நிலையில், 2 மற்றும் 3 BHK வீடுகள் ரூ.59.99 லட்சம் முதல் விற்பனைக்கு கிடைக்கின்றன.
எட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் 7.45 சதவீதம் முதல் வீட்டுக் கடன் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அறிமுகச் சலுகையாக கடன் பரிசீலனைக் கட்டணம் மற்றும் ஆவணக் கட்டணங்களில் தள்ளுபடி வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் நேரடியாகப் பார்வையிட மாதிரி வீடுகளும் தயார் நிலையில் உள்ளன.
நவீன வசதிகளுடன் குடியிருப்பு;
மருதமலை மற்றும் ஆனைகட்டி மலைத்தொடர்களின் இயற்கை அழகை ரசிக்கும் வகையில் ஸ்கைடெக் வசதி, ஸ்மார்ட் ஹோம் ஆட்டோமேஷன், உடற்பயிற்சிக் கூடம், பல்நோக்கு அரங்கம், குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி, கண்காணிப்பு கேமராக்களுடன் 24 மணி நேரப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
வடவள்ளி, சாய்பாபா காலனி, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகளுக்கு அருகில் இக்குடியிருப்பு அமைந்துள்ளது. மேலும், TNCD நிறுவனத்தின் சொந்த ஆலையில் தயாரிக்கப்படும் நவீன பிரீகாஸ்ட் (Precast) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இக்குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து TNCD நிறுவனத்தின் இணை நிறுவனர் சஞ்சனா விஜயகுமார் கூறுகையில்,
திட்டம் அறிமுகமாவதற்கு முன்பே அனைத்து 1 BHK வீடுகளும் விற்பனையாகியிருப்பது, நிறுவனத்தின் மீது கோவை மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகத் தெரிவித்தார். நவீன தொழில்நுட்பம் மற்றும் சிறப்பு வசதிகளுடன் நீண்ட காலத்திற்குப் பயனளிக்கும் தரமான வீடுகளை உருவாக்குவதே நிறுவனத்தின் நோக்கம் என்றும் கூறினார்.
TNCD நிறுவனம் இந்த மாதத்தில் Capital City திட்டத்தில் 150 வீடுகளையும், Grand City திட்டத்தில் 90 வீடுகளையும் வாடிக்கையாளர்களிடம் ஒப்படைத்துள்ளது. இதுவரை 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புத் திட்டங்களை நிறைவு செய்து, 4,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.