• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆன்லைன் அன்பு

August 5, 2016 தண்டோரா குழு

ஹாலந்து நாட்டில் வசிக்கும் 41 வயது நிரம்பிய பீட்டர் சிர்க். அவர் 26 வயது ஸாங் என்ற சீனப் பெண்ணுடன் ஆன்லைன் மூலம் நட்பு பாராட்டி வந்தார். முதலில் நண்பர்களாகப் பழகிய அவர்கள் பிறகு காதலர்களாக மாறினர். சுமார் 4,500 மைல்கள் தூரத்தில் இருக்கும் ஸாங்கை நேரில் சந்திக்க முடிவு செய்து, சீனா செல்வதற்கு விசாவும் வாங்கினார் பீட்டர்.

ஸாங்கை தான் நேரில் சந்திக்க வருவதாகத் தகவல் கொடுத்த பீட்டர், தான் கூறியது போலவே ஹாலந்து நாட்டில் இருந்து சீனாவிற்கு சென்றார். சீனாவின் சாங்ஷா விமான நிலையத்தில் ஆவலுடன் இறங்கிய பீட்டர் ஸாங்கைத் தேடினார். ஆனால் அவர் அங்கு வரவே இல்லை.

அவருடன் தொடர்புகொள்ள முயன்ற போது அவரால் ஸாங்கை ஆன்லைனிலும் தொடர்புகொள்ளவும் முடியவில்லை. ஆனாலும், ஸாங் வருவார் என்ற நம்பிக்கையோடு விமான நிலையத்திலேயே காத்திருந்தார் பீட்டர்.

சக்கரை வியாதியால் பதிக்கப்பட்ட பீட்டர் சரியாக சாப்பிடாமல், தூங்காமல் ஒரே இடத்திலேயே அமர்ந்திருந்த காரணத்தால் அவருடைய உடல்நலம் மோசமானது.அவரை மருத்துவமனையில் சேர்க்கும் நிலை ஏற்பட்டது.மேலும், அவருடைய நிலையைக் கண்டவர்கள் அவரை விசாரித்த போது, நடந்தவற்றை விவரமாகக் கூறியுள்ளார். அவரைப் படம் பிடித்து, இணையத்தில் வெளியிட்டனர் அவரது நலம் விரும்பிகள்.

இந்த நிகழ்ச்சியை அறிந்த சில சீன பத்திரிகையாளர்கள் பீட்டருக்கு உதவி செய்ய எண்ணி அவருடைய காதலியான ஸாங்கைத் தேடிச் சென்றனர்.ஆனால், அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வதற்காக பக்கத்து நகருக்குச் சென்றிருப்பது தெரிய வந்தது. அவர்கள் ஸாங்கிடம் பீட்டர் குறித்து தகவல் தெரிவித்தனர்.

தகவலைக் கேட்ட ஸாங் ஆச்சரியமடைந்தார். பீட்டர் பயணம் குறித்து என்னிடம் தெரிவித்தது உண்மைதான். ஆனால், நான் விளையாட்டுக்குச் சொல்கிறார் என்று நினைத்தேன். பல ஆயிரம் மைல்கள் தாண்டி வந்து நிற்பார் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் பழக ஆரம்பித்து 2 மாதங்கள்தான் ஆகின்றன.

மேலும், நாங்கள் காதலின் முதல் படியில்தான் இருக்கிறோம். அதற்கே பீட்டர் இவ்வளவு அன்பு செலுத்துவார் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதற்குப் பிறகு அவர் என்னைத் தொடர்புகொள்ளவே இல்லை.

நானும் அறுவை சிகிச்சை காரணமாக ஆன்லைன் பக்கம் செல்லவில்லை. இதனால் எனக்கு பீட்டர் மேல் இருக்கும் அன்பு இன்னும் அதிகரித்து உள்ளது. எங்கள் காதலைத் தொடர்வோம். நான் மருத்துவமனையில் இருந்து திரும்பிய பிறகு, நிச்சயம் பீட்டரை சந்திப்பேன் என்று ஸாங் தெரிவித்தார்.

மேலும், பீட்டரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, கடந்த திங்கள்கிழமை அவரை ஹாலந்துக்கே திரும்பி அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க