October 26, 2017
தண்டோரா குழு
நவம்பர் 7ம் தேதி கட்சி அறிவிப்பு இல்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக தனது அரசியல் பிரவேசம் பற்றி பல விஷயங்களை கமல் தெரிவித்து வருகிறார். இதற்கிடையில் அவர் தனது பிறந்த நாளான நவம்பர் 7ம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட போவதாக தெரிவித்திருந்தார். இதனால் நவம்பர் 7ம் தேதி கமல் கட்சி துவங்க உள்ளதாக செய்திகள் பரவின.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், ஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது.பிறந்த நாளான நவம்பர் 7ம் தேதி ரசிகர்களை சந்திப்பது வழக்கமானது என்றும் பொது அறிவுப்புகள் மக்கள் மன்றத்திலேயே நடக்கும் என்றும் கூறியுள்ளார்.