• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் மழை நீடிக்கும் – 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

October 31, 2017 தண்டோரா குழு

வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை, உட்பட 10 மாவட்டங்களில் 48 மணி நேரத்திற்கு பலத்த மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில்,

” தென்மேற்கு வங்க கடலில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகி இலங்கை அருகே மையம் கொண்டு இருந்தது.இதன் காரணமாக சென்னையில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னை மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட தமிழகத்தின் 10 கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்நிலையில்,இந்த மேலடுக்கு சுழற்சியானது,மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையே மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டுள்ளது.இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களிலும் புதுவையிலும் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும்.

மேலும்,கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும். உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யும்”. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க