October 28, 2017
தண்டோரா குழு
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட தென் கொரிய மீனவர்களை வட கொரியா விடுதலை செய்துள்ளது.
தென் கொரிய மீனவர்கள் வட கொரியாவின் ராணுவ எல்லைபகுதியில் கடந்த சனிக்கிழமை(அக் 21),மீன் பிடித்துகொண்டிருந்தனர். வட கொரிய கடற்படை கப்பல்,அந்த பகுதியில் ரோந்து வந்தபோது, ராணுவ எல்லை பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தென் கொரிய மீனவர்களை கைது செய்து, அவர்களுடைய படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில்,வழி தவறி வந்தது தெரிய வந்ததாலும்,அதற்காக மன்னிப்பு கேட்டு கொண்டதால், அவர்களை வட கொரியா நாட்டின் அரசு விடுதலை செய்தது.அவர்கள் விரைவில் நாடு திரும்புவார்கள் என்று எதிர்பாக்கப்படுகின்றது.