• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாகிஸ்தான் பாடசாலை வேண்டாம் தூதரகக் குழந்தைகளுக்கு இந்தியா உத்தரவு

July 26, 2016 தண்டோரா குழு

இந்திய தூதரக ஊழியர்களின் குழந்தைகளை பாகிஸ்தான் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம், இந்தியாவிலேயே படிப்பைத் தொடர வேண்டும் என அரசு ஆணையிட்டுள்ளது.

அதன்படி தூதரக ஊழியர்கள் இந்தியா திரும்ப வேண்டும் அல்லது தங்கள் குழந்தைகளை மட்டும் திருப்பி அனுப்பவேண்டும் என்ற நிலையில் உள்ளனர்.

பெஷவர் பள்ளியில் நடந்த வன்முறைச் செயல் போன்றவற்றால் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழ்நிலை இல்லை, அதிலும் இந்தியாவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அதீதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

பள்ளியில் இருந்து சுற்றுலா செல்ல வேண்டுமெனில் இக்குழந்தைகள், பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலகத்திடம் அனுமதி பெறவேண்டும். அப்படி விண்ணப்பித்தால் அவை பலமுறை நிராகரிக்கப்படுவதும் உண்டு.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே இந்திய அரசாங்கம் இத்தகைய முடிவை எடுத்துள்ளது. பெரும்பான்மை மாணவர்கள் அமெரிக்கப் பள்ளியான இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆப் இஸ்லாமாபாதிலும், சிலர் ரூட்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியிலும் பயிலுகின்றனர்.

இந்தியாவின் இம்முடிவு பாகிஸ்தானில் உள்ள அயல் நாட்டுத் தூதரகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் இம்முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தான் விண்ணப்பித்துள்ளது. ஆனால் இந்திய அரசு குழந்தைகளின் நலனை முன்னிட்டு வேண்டுகோளை நிராகரித்துவிட்டது.

இப்போது தாங்களே தாய் நாடு திரும்புவதா அல்லது குழந்தைகளை மட்டும் திருப்பி அனுப்புவதா என்பதே ஊழியர்கள் முன் உள்ள கேள்வி.

இது அமுலுக்கு வருவதால் இந்திய தூதரக ஊழியர்களின் குழந்தைகள் 60 பேர் அடுத்த காலாண்டில் பள்ளிக்குத் திரும்பமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க