• Download mobile app
17 Oct 2025, FridayEdition - 3537
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பீகாரில் மதுவிலக்கு ரத்து: பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு

September 30, 2016 தண்டோரா குழு

பீகாரில் முழு மதுவிலக்குச் சட்டத்தை ரத்து செய்து பாட்னா உயர் நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.பீகார் அரசு கொண்டு வந்த மது தடைச்சட்டம் சட்ட விரோதமானது என்றும் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் நிதிஷ்குமார் சட்டசபை தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார்.அதன்படி பதவி ஏற்றதும் ஏப்ரல் மாதம் முதல் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது.

மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதால் அரசுக்கு 5000 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் 10 ஆயிரம் கோடி மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என்ற கருத்தினை பீகார் அரசு மக்களிடையே முன்வைத்து வந்தது.

இதற்கிடையே சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்யப்படும் கள்ளச்சாராயத்தினால் பலர் உயிரிழந்துள்ளனர். எனவே பீகார் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கடுமையான மதுவிலக்கு சட்டத்தை நீக்கக்வேண்டும் என பாட்னா உயர்நீதிமன்றத்தில் மது விற்பனை சங்கம் மற்றும் தனிநபர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி இக்பால் அகமது அன்சாரி, நீதிபதி நபநிதிபிரசாத் சிங் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியானது . அதில் மது அருந்துதல் மற்றும் விற்பனையை தடை செய்வது தொடர்பாக ஏப்ரல் 5-ம் தேதி கொண்டு வரப்பட்ட அறிவிப்பாணை ரத்து செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் பூரண மது விலக்கு சட்டம் சட்டவிரோதம் என்றும், இதனை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தீர்ப்பளித்தனர்.

மேலும் படிக்க