• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தெற்கு ரயில்வே கால அட்டவணை வெளியிட்டது.

September 30, 2016 தண்டோரா குழு

தெற்கு ரயில்வே அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில்ர புதிய கால அட்டவணையை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்ட ஜோரி வெளியிட்டார்.

தெற்கு ரயில்வே நடப்பு ஆண்டில் 9 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்டஜோரி கூறுகையில்,

சென்னை சென்ட்ரல் – அகமதாபாத் ஹம்சாபர் வாராந்திர எக்ஸ்பிரஸ், திருச்சி- ஸ்ரீகங்கா நகர் இடையே வாராந்திர ரயில், சென்னை சென்ட்ரல் – சந்திரகாசி இடையே வாராந்திர ரயில், எர்ணாகுளம்- ஹவுரா அந்தோதியா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வாரம் ஒருமுறை, கோயம்புத்தூரில் இருந்து கே.எஸ்.ஆர். பெங்களூருக்கு உதய் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் – ஹட்டியா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வாரம் ஒரு முறை,புவனேஸ்வர்- கிருஷ்ணா ராஜபுரம் இடையே வாராந்திர ரயில், ஹவுரா – யஷ்வந்த்பூர் இடையே சூப்பர் பாஸ்ட் வாராந்திர ரயில், கமக்யா- பெங்களூர் கண்டோண்ட்மென்ட் இடையே சூப்பர் பாஸ்ட் வாராந்திர ரயில் விடப்படும் என தெரிவித்தார்.இதில் ரயில்கள் இயக்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

அதில் கோயம்புத்தூரில் இருந்து கே.எஸ்.ஆர். பெங்களூருக்கு புதிதாக இயக்கப்படும் உதய் எக்ஸ்பிரஸ் வாரத்தில் 6 நாட்களும் இயக்கப்படும். திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் கோவையில் இருந்து புறப்பட்டு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கோவை ரயில் பயணி மதிவாணன் என்பவர் கூறுகையில்,

கோவையில் இருந்து பெங்களூருக்கு வேலைக்காக தமிழகத்திலிருந்து பல ஆயிரம் பேர் சென்று வருகின்றனர். இதன் காரணமாக கோவையிலிருந்து அதிக அளவில் பெங்களூருக்கு ரயில் இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை பல நாட்களாக வைக்கப்பட்டிருந்தது. தற்போது புதிதாக பெங்களூருக்கு ரயில் விடப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

மேலும் படிக்க