• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீண்டும் வருகிறது புதிய ஒரு ரூபாய் நோட்டு

November 4, 2016 தண்டோரா குழு

மத்திய ரிசர்வ் வங்கி புதிய 1 ரூபாய் கரன்சி நோட்டை வெளியிடவுள்ளது என மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய ரிசர்வ் வங்கி புதிய 1 ருபாய் கரன்சி நோட்டுகளைப் புழக்கத்தில் விட உள்ளது. புதிய நோட்டில் H சின்னத்துடன் உட்பொதிந்த L எழுத்துடன், நோட்டின் முன்புறம் ரோஜா நிறத்துடன் இணைந்த பச்சையிலும் பின்புறம் மற்ற நிறக் கலவையிலும் இருக்கும்.

9.7x 6.3 செ.மீ., அளவில் அமைய இருக்கும் இந்த நோட்டின் முன்புறத்தில் பாரத் சர்க்கார் என்ற வார்த்தைகள் இருக்கும். இதில் நிதித்துறைச் செயலர் ரத்தன் பி வட்டலின் இரு மொழி கையெழுத்தும் இடம்பெற்றிருக்கும்.

எண்களானது நோட்டின் வலது கீழ்ப்புறம் கருப்பு வண்ணத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கும். இவற்றோடு ரூபாயின் மதிப்பானது 15 இந்திய மொழிகளில், மொழிகளுக்கான முகப்பிலும், நோட்டின் மையப் பகுதியின் கீழ்ப்புறம் சர்வதேச எண்ணில் ஆண்டும் அச்சிடப்பட்டிருக்கும்.

புதிய நோட்டு புழக்கத்திற்கு வந்த பின்னும், ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள நாணயங்களும் தொடர்ந்து சட்டப்படி செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க