• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நேரு ஸ்டேடியத்தில் வடகிழக்கு பெண்களை தொந்தரவு செய்த ஆண்கள்

November 25, 2017 தண்டோரா குழு

சென்னை நேரு ஸ்டேடியத்தில் கால்பந்து போட்டியின் போது வடகிழக்கு பெண்களை இளைஞர் ஒருவர் தொந்தரவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று கால்பந்து போட்டியான இந்தியன் சூப்பர் லீக் நடைபெற்றது. இதில் நேற்று சென்னையின் எஃப்.சி. அணிக்கும் வடகிழக்கு யுனைடெட் அணிக்கும் சென்னை நேரு ஸ்டேடியத்தில் போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் போது சென்னை அணியின் கை ஓங்கியது. மூன்று கோல்களை அடித்து முன்னிலையில் இருந்தது. போட்டியை காண வடகிழக்கு பகுதியை சேர்ந்த இளம் பெண்கள் வந்திருந்தனர். அப்போது அங்கு வந்திருந்த ஆண்கள் கூட்டம் ஒன்று அப்பெண்களை சுற்றி வளைத்தது மட்டுமல்லாமல், தவறான செய்கைகளை செய்து காட்டி அவர்களை கிண்டல் செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ பதிவு செய்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க