• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அழிந்து வரும் இயற்கை!பிளாஸ்டிக் பொருட்களை அநாவிசியத்திக்காக பயன்படுத்த வேண்டாம்.

June 7, 2018 ஷாலினி சுப்பிரமணியம்

ஓரறிவு புல் முதல்,ஆறறிவு மனிதன் வரை இந்த பூமியில் வாழ ஏதுவாக அமைந்துள்ளது.ஆனால் அப்படிப்பட்ட இயற்கையை நாம் சரியாக பயன்படுத்துகிறோமா என்று கேட்டால் இல்லை?

இது குறித்து வேர் சமூக அமைப்பின் நிறுவன தலைவர் ஜெரோம் வசந்த் கூறுகையில்,

“கிராமப்புற மக்களிடத்தில் சுற்றுசூழல் பற்றிய எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லை.சுற்றுபுற சீர்கேட்டினால் வரும் பின்விளைவுகள் குறித்து எந்த வித அறிவும் இல்லை.வீடுகளிலிருந்து தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் மண்ணின் தன்மையை பாதிப்பதோடு மட்டுமல்லாமல்,நம்மை சுற்றியுள்ள உயிரினங்களையும் பாதிக்கிறது.கேன்சரில் தொடங்கி குடல் புண்,மூச்சுக்குழாய் பாதிப்பு,நரம்புத்தளர்ச்சி போன்ற பல நோய்களை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக மருதமலை பகுதிகளில் அதிக பிளாஸ்டிக் பைகள் சாலைகளில் கிடப்பதாகவும்,அதனை அப்பகுதிகளில் வசிக்கும் யானை,மாடு போன்ற விலங்குகள் உண்பதால் அதற்கு பல விதமான நோய்கள் ஏற்படுகிறது.பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணில் மக்கவே பல ஆண்டுகள் ஆகும், வயிற்றுக்குள் செல்லும் போது அந்த உயிரினங்களின் நிலை என்ன ஆகும்.

குப்பைகளை இரண்டு வகையாக பிரிக்கலாம்.மட்கும் குப்பை(இளகும் வகை),இவைகளை மறுசுழற்சிக்கு பயன்படுத்தலாம்.மட்காத குப்பை(இறுகும் வகை)இவைகளை மறுசுழற்சிக்கு பயன்படுத்த முடியாது.

பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்வதை குறைத்தாலே,மக்கள் அதை வாங்குவதை குறைத்து விடுவார்கள்.உணவகங்கள்,துணிக்கடை,மருந்தகங்கள்,மற்றும் தேனீர் கடை போன்ற இடங்களில் பிளாஸ்டிக் தேவையும்,பயன்பாடும் அதிகமாக உள்ளது.பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணில் மட்க கிட்டதட்ட 1000 வருடங்கள் ஆகின்றது.தினசரி நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பை பயன்படும் நேரம் என்னவோ 30 நிமிடம் தான்,ஆனால் அது மட்க எடுத்துக்கொள்ளும் காலம் 450 வருடங்களுக்கும் மேலாகும்.கேட்பதற்கு ஆச்சர்யமாக இருந்தாலும் இது தான் உண்மை.பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை விட்டுவிட்டு,மக்களுக்கு பயனளிக்கும் நல்ல மரங்களை நடுவோம்.இது குறித்து இளைஞர்கள் தான் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்”.

இது குறித்து கல்லூரி மாணவன் ரஞ்சித்திடம் கேட்ட போது,

“பிளாஸ்டிக்கை தொடர்ந்து பயன்படுத்துவதால் சுற்றுப்புற சீர்கேடு எற்படும்.இவை நம்மை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், நம்முடைய வளரும் தலைமுறையையும் பாதிக்கும்.மனிதர்கள் இயற்கையை விட்டுவிட்டு செயற்கையை தேடி செல்கிறோம்.

அப்போதெல்லாம் குழந்தைகள் விளையாடுவதற்காக மண் பொம்மைகள்,மரச்சாமான்கள்களை உபயோகித்து வந்தனர்.ஆனால் இப்போது பெற்றோர்கள் குழந்தைகள் விளையாடுவதற்காக பிளாஸ்டிக் பொம்மைகளையே பெரிதும் வாங்கி வருகின்றனர்.குழந்தைகள் வாயில் வைத்து விளையாடும் போது,இதுவே பலவிதமான நோய்கள் ஏற்பட ஏதுவாக உள்ளது.பொது மக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களின் பாதிப்பு பற்றி தெரிந்தும்,அதையே திரும்ப வாங்கி பயன்படுத்துவது மக்களின் அலட்சியம் தான்.

தினசரி வாழ்வில் படுத்தப்படும் பிளாஸ்டிக் தட்டுகள்,டம்ளர்கள்,பிளாஸ்டிக் கப்புகள் மற்றும் பிளாஸ்டிக் சார்ந்த பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.பிளாஸ்டிக் பொருட்களை அத்தியாவிசியத்துக்காக பயன்படுத்துவதை தான் தவறு சொல்லவில்லை ஆனால் அநாவிசியத்துக்காக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

மாசுபட்ட இயற்கை மனிதர்களுக்கு ஒருபோதும் உதவாது.காசுக்காக அழிக்கப்படும் இயற்கை வளங்கள்,எத்தனை காசு கொடுத்தாலும் திரும்ப பெற முடியாது”.

மேலும் படிக்க