• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அனைவரும் தூய்மை பணியில் ஈடுபட வேண்டும் – மோடி

October 1, 2016 தண்டோரா குழு

தூய்மை இந்தியா திட்டம் அக்டோபர் 2 ம் தேதி 2014ம் ஆண்டு துவக்கப்பட்டது.இத்திட்டம் துவங்கப்பட்ட நாளான இன்று,அனைவரும் தூய்மை பணியில் ஈடுபட வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்திய மக்கள் அனைவருக்கும் எனது நவராத்திரி நல்வாழ்த்துக்கள். அக்டோபர் 2ம் தேதி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அனைவரும் தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

தூய்மை பணியில் ஈடுபடும் உங்களின் புகைப்படங்களை நரேந்திர மோடி ஆப்ஸ் மூலம் பகிருங்கள். உங்களின் இந்த முயற்சி பலருக்கும் முன்னோடியாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.

தூய்மை இந்திய திட்டத்திற்கு இந்தியாவில் உள்ள பல பிரபலங்கள் விளம்பர தூதுவர்காளாக நியமிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க