தனியார் உடற்பயிற்சிக் கூடம் மற்றும் அழகு நிலையம் ஆகியவை இந்தியாவின் பார்முலா ஒன் ரேஸ் போட்டியாளர் நரன் கார்த்திகேயனால் துவக்கிவைக்கப்பட்டது. அதில் கலந்துகொண்ட நரேன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, அக்டோபர் மாத இறுதியில் ஜப்பானில் நடைபெறவுள்ள சூப்பர் பார்முலா சாம்பியன்ஷிப் போட்டியில் தங்களது குழு மிகச் சிறப்பாக செயல்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த போட்டிகளில் சிறு சறுக்கல்கள் இருந்தாலும் தற்போது ஒரு குழுவாக இணைந்து பயிற்சி மேற்கொண்டுள்ளோம், எனவே மிக அருமையான திறமையை வெளிப்படுத்தமுடியும் எனத் தெரிவித்தார்.
செப்டம்பரில் நடக்க இருந்த போட்டி நிலநடுக்கத்தால் கைவிடப்பட்ட போதும், அக்டோபரில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற முழு முயற்சி எடுத்து வருகிறோம் எனத் தெரிவித்தார். மேலும் ஆரம்பக்கால கட்டத்தில் தான் உடற்பயிற்சி பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்ததாகவும், பின்னர் உடற்பயிற்சி மேற்கொண்டதால் திறமையிலும் வாழ்விலும் பல்வேறு முன்னேற்றங்களை அடைந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் வயதானவர்களைக் கட்டிலும் தற்போது இளைஞர்கள் தான் அதிக உடல் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். எனவே ஜன்க் உணவுகளைத் தவிர்த்து நாள் ஒன்றிக்கு குறைந்த நேரத்தையாவது உடற்பயிற்சிக்கு ஒதுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்