• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பறை கொட்டித் தொழ அழைக்கும் மலப்புரம் மசூதி.

June 16, 2016 தண்டோரா குழு

200 வருடப் பாரம்பரிய மிக்க மசூதி, பாங்க் இசைக்க மின்சார ஒலி பெருக்கியை உபயோகிப்பதில்லை.மாறாகச் சம்பிரதாயமான முரசை ஒலிக்கச் செய்கின்றனர்.

அனைத்து மசூதிகளிலும் தொழுகைக்கான நேரத்தை உணர்த்த ஒலி பெருக்கி மூலம் சீரான தாளத்துடன் கூடிய வரிகளைப் பாடுவது வழக்கம். இஸ்லாமிய மேலை நாடுகளில் இந்த பாங்க் சப்தம் ஒலிக்கத் துவங்கிவிட்டால் யார் எந்த வேலையில் இருந்தாலும் அதை விடுத்து தொழுகைக்குச் சென்று விடுவர். கடைகளை மூடிவிடுவர்.

கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டம் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதி.இங்குள்ள வாண்டூரில் உள்ள மசூதி மிகப் பழமை வாய்ந்தது.மற்ற எல்லா மசூதிகளும் மின்சார ஒலி பெருக்கி மூலம் பாங்க் இசைக்கும் போது இந்த மசூதியில் மட்டும் பழைய கால முறைப்படி முரசு கொட்டி தொழுகை நேரத்தை உணர்த்துகின்றனர்.

இந்தப் பறை அல்லது முரசு என்பது ஒரு கோள வடிவுள்ள பாத்திரத்தில் ஆட்டின் தோலைப் பதப்படுத்தி இழுத்துக் கட்டியிருப்பர்.இதன் மேல் ஒரு வளைந்த குச்சியால் அடிக்கும் போது இடி போன்ற சப்தம் கேட்கும்.

தொழுகைக்கு நேரமாகி விட்டது என்பதை உணர்த்தவும்,ரம்ஜான் நோன்புக் காலத்தில் இரவில் உண்பதற்கான நேரம் வ்ந்துவிட்டது என்பது போன்ற முக்கிய விஷயங்களை நினைவுறுத்தவும் இந்த பாங்க் ஒலிக்கச் செய்யப்படும்.

மௌலானா நஜீப் முல்லா என்ற சன்னி இன அறிஞர் இந்தப் பாரம்பரியமான முரசு இஸ்லாமியர்களால் நேசிக்கப்படும் ஒன்று என்று தெரிவித்துள்ளார். முந்தைய காலத்தில் கிழக்குக் கிறிஸ்துவ இனத்தவரால் வழிபாட்டுச் சேவைகளுக்கு மக்களை அழைக்க இடைக்கால கருவியான நாகோஸ் உபயோகப்படுத்தப் பட்டது.நாளடைவில் எல்லாக் கருவிகள் போல் இவையும் காலாவதி ஆகிவிட்டன.

எனினும் இங்குள்ள மக்கள் தங்கள் ரம்ஜான் விரதத்தை பள்ளிக்குளம் ஜிம்மா மஸ்ஜித் மசூதியிலிருந்து எழும்பும் நாகோஸ் சப்தத்தை க் கேட்ட பின்னரே முடிப்பர்.வேறு எந்த மசூதியிலிருந்து அழைப்பு வந்தாலும் இம் மக்கள் பொருட்படுத்தமாட்டார்கள் என்று நஜீப் மௌல்வி தெரிவித்தார்.

மேலும் படிக்க