• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இருக்கும் தாய், மகன்.

July 25, 2016 தண்டோரா குழு

ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் வருகிற 5ந் தேதி தொடங்குகிறது. இதில் தாய், மகன் இருவரும் பங்கேற்க இருக்கும் அரிய நிகழ்வு இந்த முறை அரங்கேற உள்ளது.

ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் வருகிற 5-ந் தேதி தொடங்குகிறது. துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனையான 47 வயதான நினோ சலுக்வாட்சே 1988ம் ஆண்டு சியோலில் நடந்த ஒலிம்பிக்கில் சோவியத் யூனியன் சார்பில் களம் இறங்கினார். அதில் பெண்களுக்கான 25 மீட்டர் ஸ்போட்டிங் துப்பாக்கிச் சுடுதலில் தங்கப்பதக்கமும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் வென்றார்.

சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த ஜார்ஜியா அணி சார்பில் 2008ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் வெண்கலப்பதக்கம் பெற்றார். விரைவில் தொடங்க உள்ள ரியோ ஒலிம்பிக்கிலும் பங்கேற்க அவர் தகுதி பெற்றுள்ளார்.

8-வது முறையாக ஒலிம்பிக்கில் அடியெடுத்து வைக்கும் நினோ சலுக்வாட்சேவுடன் அவரது மகனான 18 வயது டிசோட்னே மசாவரினியும் கலந்து கொள்கிறார். தனது தாயை போல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் கலந்து கொள்ள அவரும் தகுதி பெற்றுள்ளார்.

இது குறித்து நினோ சலுக்வாட்சே கருத்து தெரிவிக்கையில், ‘எனது மகனுடன் இணைந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருப்பது எனக்கு மகிழ்ச்சியும், பெருமையும் தருகிறது.

நாங்கள் எங்களுடைய சிறந்த திறனை வெளிப்படுத்துவோம். குடும்ப உறவு விளையாட்டில் ஒரு பிரச்சினை இல்லை. எனது மகனின் ரசிகை நான் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க