• Download mobile app
07 May 2026, ThursdayEdition - 3739
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உடல்உறுப்பு தான தூதரானார். நடிகர் மோகன்லால்

September 28, 2016 தண்டோரா குழு

கேரளாவில் உடல் உறுப்பு தானம் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக கடந்த 2012-ம் ஆண்டு “மிருத சஞ்சீவினி” என்ற திட்டத்தை கேரள அரசு அறிவித்தது. “கேரள நெட்வொர்க் பார் ஆர்கன் சேரிங்” என்ற தனியார் அமைப்பின் உதவியுடன் கேரள அரசின் நேரடி கண்காணிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த திட்டத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த உடல் உறுப்புதானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்துள்ளார்.இதை தொடர்ந்து உடல் உறுப்புதான விளம்பர தூதராக பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி பினராயி விஜயன் தனது பேஸ்புக்கில் எழுதியுள்ளார். அதில், உடல் உறுப்பு தானம் உயிர் காக்கும் என்ற கோ‌ஷத்துடன் இத்திட்டத்திற்கு புத்துயிர் கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது. உடல் உறுப்பு தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் பலரது உயிரை காக்க முடியும் என கூறியுள்ளார்.

மேலும் படிக்க