November 7, 2017
தண்டோரா குழு
நடிகர் கமல்ஹாசன் தனது 63வது பிறந்தநாளை முன்னிட்டு Miamwhistle என்ற செயலியை தொடங்கி வைத்தார்.
தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி.நகரில் நற்பணி இயக்கத்தினருக்கான செயலியை அறிமுகம் விழாவில் கலந்து கொண்டு பேசினார். #theditheerpomvaa #maiamwhistle #virtuoscycles என்ற 3 ஹேஷ்டேக்-களை நடிகர் கமல்ஹாசன் அறிமுகம் செய்தார்.
அப்போது, நான் பிறந்தற்கான காரணத்தை நிரூபிக்க காலம் வந்துவிட்டது என குறிப்பிட்ட கமல் மகாத்மா காந்தி மற்றும் விவேகானந்தர் நாடு முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு தங்கள் பணிகளை செய்தனர். நானும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். மேலும் கட்சிக்கு அஸ்திவாரம் முக்கியம் என கமல்ஹாசன் கூறினார்.