• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

MeToo பதில் சொல்லுங்கள் அல்லது பதவி விலகுங்கள்! மத்திய அமைச்சர் எம்.ஜே அக்பருக்கு எதிராக காங்கிரஸ் கடும் சாடல்

October 10, 2018 தண்டோரா குழு

மத்திய அமைச்சர் எம்.ஜெ.அக்பர் தன் மீதான பாலியல் புகாருக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

உலகம் முழுக்க ஒரு ஹேஸ்டேக் பல புயல்களை,பல குற்றச்சாட்டுகளை,பல தீர்வுகளை,பல சர்ச்சைகளை சுமந்து வலம் வருகிறது என்றால் அது “மீடூ” “#MeToo” ஹேஷ்டேக் தான்.அமெரிக்கா,ஆஸ்திரேலியா என்று சுற்றிய இந்த ஹேஷ்டேக் தற்போது இந்தியாவிலும் பிரபலமடைந்துள்ளது.

பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதை வெளியே சொல்லாமல் புழுங்கிக்கொண்டிருந்த பெண்கள்,சமூகவலைதளங்களில்,மீடூ இயக்கத்தின் மூலம் தற்போது தங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கூறி வருகின்றனர்.திரையுல பிரபலங்கள் தொடங்கி பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மத்திய அமைச்சர் எம்.ஜெ.அக்பர் மீது பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் சமீபத்தில் டுவிட்டர் மூலம் பாலியல் புகார் அளித்தார்.அவரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.இந்த புகார் குறித்து இதுவரை மத்திய அமைச்சர் எந்த பதிலும் அளிக்கவில்லை.இந்த விவகாரம் எம்.ஜே.அக்பருக்கு மட்டுமின்றி மத்திய அரசுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.தற்போது இந்த விவகாரத்தை எதிர்கட்சியான காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது.

இந்நிலையில்,தனது துறையின் இணையமைச்சர் மீது பாலியல் ரீதியான புகார் வந்துள்ள நிலையில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அமைதி காப்பது ஏன்? அமைச்சர் அக்பர் இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.இல்லாவிட்டால் பதவி விலக வேண்டும்.இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்., எம்.பி., ஜெய்பால் ரெட்டி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க