October 23, 2017
தண்டோரா குழு
நடிகர் விஜயின் மெர்சல் படத்தில் வரும் ஜிஎஸ்டி பற்றிய வசனங்கள் தவறானது என்று சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் “விஜய் இந்து அல்ல கிறிஸ்தவர் இந்துக்கள் மட்டுமே தமிழர்கள்” என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இதுமட்டுமின்றி விஜய்யின் வாக்காளர் அடையாள அட்டையை வெளியிட்டு “உண்மை கசக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய்யின் மதம் இந்தியன். அவர் ஜாதி இந்தியன் என பள்ளியில் சேர்க்கும் போதே நான் போட்டுவிட்டேன். இப்போது ஒருவரின் பெயரை வைத்த அவரின் மதத்தை அடையாளப்படுத்துவது சிறுபிள்ளைதனமானது” என்று கூறியுள்ளார்.