• Download mobile app
10 Apr 2026, FridayEdition - 3712
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“மெரினா புரட்சி” படத்துக்கு தணிக்கைக்குழு தடை!

October 11, 2018 தண்டோரா குழு

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்ககோரி சென்னை மெரினாவில் கடந்தாண்டு நடந்த வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் வெற்றி போராட்டத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் “மெரினா புரட்சி”.

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியை பற்றி பேசும் வகையில் உருவாகியுள்ள இப்படத்தை நாட்சியாள் பிலிம்ஸ் சார்பில் எம்.எஸ்.ராஜ்,தயாரித்து இயக்கியுள்ளார்.பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.மேலும்,இப்படம் வெளியானால் ஜல்லிக்கட்டு தடைக்கு பின்னணியில் இருந்த சில தமிழர்களின் முகமூடிகள் கிழிக்கப்பட்டு வெளிச்சத்திற்கு வரும் என இயக்குனர் எம்.எஸ்.ராஜ் கூறியிருந்த நிலையில் இப்படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளிலும் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில்,இப்படத்திற்கு மத்திய தணிகை குழு சான்றிதழ் தார மறுத்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.மேலும் இப்படத்திற்கு தடை விதித்த தணிக்கை குழு மும்பையில் உள்ள மறுசீராய்வு கமிட்டிக்கு அனுப்பியுள்ளனர்.இச்சுழலில் மறுசீராய்வு குழுவில் மெரினா புரட்சி படத்திற்கு உரிய நீதி கிடைக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க