• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விலங்குகளுக்கும் கருணை காட்டுவோம்.

June 1, 2016 தண்டோரா குழு.

நண்டுக்குத் திண்டாட்டம், நரிக்குக் கொண்டாட்டம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். மனிதர்களின் கேளிக்கைக்காகவும், பரவசத்திற்காகவும் வாயில்லா ஜீவன்களை வதைப்பது எந்த விதத்தில் நியாயம்? என்ற கேள்வி தற்போது பரவலாக கேட்கப்பட்டு வருகிறது.

சுதந்திரமாக வனத்தில் திரியவேண்டிய யானைகளைப் பிடித்து அடைத்து வைத்து, சித்திரவதை செய்ததன் மூலமாகக் கடந்த 5 மாதத்தில் மட்டும் 9 யானைகள் இறந்து விட்டன என்று பாரம்பரிய விலங்குச் செயலணி (HATF) செயலர் வி.கே.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

குறிப்பாகக் கேரள மாநிலத்தில் யானைகளைக் கோயில்களில் பூஜைக்காகவும் மற்றும் பல சடங்குகளுக்கும் பயன்படுத்துவது அதிகம். திருச்சூர் பூரம் போன்ற விழாக் காலங்களில் ஸ்வாமி சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், மற்ற சடங்குகளுக்கும் அதிகப்படியான யானைகளைப் பயன் படுத்துவது வழக்கம். இச்செயல்களைச் செய்வதற்கு யானைகளைப் பழக்கப்படுத்துவது அவசியம்.

இந்த யானைகளை மூலதனமாக வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களும் உண்டு. யானைகளைப் பழக்கும் தருணத்தில் யானைப் பாகர்கள் அதனிடம் கடுமையாக நடந்து கொள்கின்றனர். பலமுறை அதைத் துன்புறுத்துகின்றனர். அத்தகைய தருணங்களில் ஏற்படும் காயங்களை இவர்கள் சரிவர கவனிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லாத காரணத்தினால் இவர்களால் யானைகளுக்குச் சிறந்த வைத்தியம் அளிக்க முடிவதில்லை. யானைகளுக்குத் தங்க தகுந்த கூடாரங்களை அமைத்துக் கொடுக்க முடிவதில்லை. வெயிலிலும் மழையிலும் அவை வாடிக்கொண்டு சித்திரவதை அனுபவிக்கின்றன. இந்நிலையில் கேரளாவில் இறந்த 9 யானைகளும் 5 மாத இடைவெளியில் இறந்ததற்குக் காரணம் மிகுந்த சித்திரவதையும், தடைசெய்யப்பட்ட மருந்துகளை உட்கொள்ளச்செய்ததுமே ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் யானைகள் கொடுமைப்படுத்துவதைத் தடுக்க 2015ம் ஆண்டு உச்ச நீதி மன்றம் விதித்த விதிமுறைகள் எதுவும் பின்படுத்தப் படுவதில்லை என்றும் வி.கே.வெங்கடாசலம் குறிப்பிட்டுள்ளார்.

விழாக்களில் யானைகள் பங்கேற்பதற்கு முன் கால்நடை மருத்துவரிடம் இருந்து தகுதிச் சான்றிதழ் பெறுவது அவசியம். ஆனால் பல கால்நடை மருத்துவர்கள் யானைகளின் உடம்பில் பலத்த காயங்கள் இருந்த போதும், நோயினால் பாதிக்கப்பட்டிருந்த போதும் பொருட்படுத்தாது தங்கள் சுய லாபத்தைக் கருத்தில் கொண்டு தகுதிச் சான்றிதழை வழங்கிவிடுகின்றனர். அதன் காரணமாக விழாவில் கலந்து கொள்ளும் பல யானைகள் உடல் நலம் குன்றியவையாகவே காணப்படுகின்றன.

யானைகளின் பாதுகாப்பு மற்றும் நலங்களைப் பேண 3 அமைப்புகள் உள்ளன.

1)சமூக வனவியல் பிரிவு 2)மாநில யானைப் பணிப்பிரிவு 3) மாவட்ட யானைப் பணிப் பரிவு.

இவ்வமைப்பு அதிகாரிகள் அனைவருமே யானைகளின் நிலமையைப் பற்றி அறிந்திருந்த போதிலும், எந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்துவதில்லை, எந்த முடிவும் எடுப்பதுமில்லை. இது அவர்களது திறமையின்மையையும் மற்றும் கருணையின்மையும் எடுத்துக் காட்டுகிறது என்றும் கூறியுள்ளார்.

கடந்த வாரம் மட்டும் பாலக்காட்டிலுள்ள ஒரு குடும்பத்தின் பராமரிப்பின் கீழ் இருந்த இரு யானைகள் பட்டினியால் இறந்தது குறிப்பிடத்தக்கது.

யானைகளுக்கு மதம் பிடிக்கும் போது அவற்றை சரிவர கையாளத் தெரியாத காரணத்தினால் 2014 – 15ம் ஆண்டில் மட்டும் 9 பாகங்கள் இறந்துள்ளனர்.

இதைவிட யானையின் பிளிறல் சத்தத்தை அடக்க வேண்டும் என்பதற்காக கோட்டனாடு மது சங்கர் என்ற யானையின் துதிக்கையில் சாக்குப் பைகளைத் திணித்த செயல் கொடுமையின் உச்சக்கட்டம்.

இதையடுத்து கேரள அரசு யானைகளின் விஷயத்தில் தகுந்த கவனம் செலுத்தவேண்டும் என்று வெங்கடாசலம் கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க