• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதலமைச்சருக்குப் பாதுகாப்பு தரும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி

November 23, 2016 தண்டோரா குழு

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு ஒரு முதலமைச்சருக்குப் பாதுகாப்பு தரும் பொறுப்பை முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி சுபாஷினி சங்கரன் கடந்த ஜூலை மாதம் ஏற்றுக்கொண்டார்.

அசாம் மாநிலத்தின் முதல்வர் சார்பானந்தா சோனோவால் அவர்களைப் பாதுகாப்பும் பெரிய பொறுப்பு சுபாஷினி உடையது. முன்பெல்லாம் ஒரு பெண் இப்படிப்பட்ட பெரிய பொறுப்பை ஏற்றுக் கொண்டால் அது ஒரு புதிய விஷயம்.

“ஆனால், காலம் செல்ல செல்ல முதலமைச்சருக்குப் பாதுகாப்பு அளிப்பதற்குத் தலைவராக ஒரு பெண் அதிகாரி இருப்பதை மக்கள் ஏற்றுக்கொண்டனர்” என்று சுபாஷினி கூறினார்.

முதலமைச்சர் பயணம் செய்யும் இடங்களைத் திட்டமிடுவதும், பாதுகாப்புப் பணியில் இருக்கும் மற்றவர்களோடு ஒருங்கிணைத்து செயல்படுவதும் சுபாஷினியின் கடமைகள். இந்த கடினமான வேலை 18 மணி நேரத்திற்கும் அதிகமானது.

சுபாஷினி தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். அவருடைய குடும்பத்தினர் யாரும் காவல் துறையில் பணியாற்றியது கிடையாது. ஒரு தனியார் நிறுவனத்தின் தொழில்துறை பாதுகாப்புத் துறையில் அவருடைய தந்தை பணியாற்றினார்; தாயார் குடும்பத்தை கவனித்து வந்தார். அவருடைய சகோதரி அமெரிக்க நாட்டில் தொழிலதிபராக இருக்கிறார். 1980ம் ஆண்டு தொடக்கத்தில் அவருடைய குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது. சுபாஷினி மும்பையில் உள்ள தானே நகரில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார்.

மும்பையில் உள்ள பிரபல புனித சேவியர்ஸ் கல்லூரியில் சமூகவியல் பாடத்தில் பட்டம் பெற்றார். மேலும், புது தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழ கத்தில் எம்.ஃபில் படிப்பில் தமிழில் (LTTE) விடுதலைப் புலிகளின் தற்கொலைக்படையை மையமாக கொண்டு பெண்களும் தீவிரவாதமும் என்னும் ஆய்வுரையை எழுதினார். அவ்வுரை இந்தியாவில் உள்ள பரந்த அரசியல் மற்றும் சமூகவியல் நிலைமை மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள உதவியது.

அதன் பிறகு, அவர் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாகி, ஹைதராபாத் நகரில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் போலீஸ் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டார்.

தற்போது அவர் செய்து வரும் பணி எளிதானது அல்ல. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் அசாம் மாநிலம் பெரியது. சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை முதல் மதவாத பிரச்சினை, கடத்தல், வன விலங்குகள் வேட்டை வரை பலதரப்பு பிரச்சனைகளைச் சமாளிக்கும் நிலையில் உள்ளது.

சுபாஷினி தற்போது ஏற்றுக்கொண்ட பதவிக்கு முன், அசாம் மாநிலத்தின் குவாஹாத்தி நகரில் உள்ள அஸ்ரா காவல் நிலையத்தில் துணை கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். அங்கிருந்து பிஸ்வநாத், சில்ச்சர், மற்றும் டெஸ்ப்பூர் ஆகிய இடங்களில் பணிபுரிந்தார். அசாம் மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பணியாற்றியதால், தற்போது அவர் வகிக்கும் பதவிக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. நான்கே ஆண்டுகளில் அசாம் மொழியைக் கற்றுக்கொண்டார்.இதனால், அவரால் மிக எளிதில் பணியைச் செய்ய முடிகிறது.

ஓய்வு நேரத்தில் சுயசரிதைகள் படிப்பது, மேற்கத்திய இசையான ஜாஸ் முற்றும் நாட்டுப்புற பாடல்களைக் கேட்பது ஆகியவை சுபாஷிநிக்கு அதிக விருப்பமானவை

மேலும் படிக்க