• Download mobile app
19 Oct 2025, SundayEdition - 3539
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஊடகங்களின் பொறுப்பின்மை அமைதிக்குப் பங்கம், காஷ்மீர் அரசு அதிகாரியின் ஆதங்கம்.

July 16, 2016 தண்டோரா குழு

ஊடகங்களின் தவறான பிரசாரத்தால் எரிச்சல் அடைந்த காஷ்மீர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷாஃபேசல் ஊடகங்கள் திருந்தாவிட்டால் தான் ராஜினாமா செய்ய நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

33 வயதான ஷா ஃபேசல் 2009 ம் ஆண்டு அரசுத் தேர்வை திறம்பட முடித்து காஷ்மீர் இளைஞர்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்பவர். கல்வித் துறை இயக்குனராகப் பணிபுரிபவர்.

காஷ்மீர் போராளி புரஹன் வானி ஜூலை 8 ம் தேதி சண்டையில் கொல்லப்பட்டார். அதை அடுத்து காஷ்மீரில் கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் 40 பேர் மாண்டனர்.

இந்நிலையில் காஷ்மீர் ஊடகங்கள் ஷா ஃபேசல்ன் புகைப்படத்தையும், போராளி புரஹன் வானியின் புகைப்படத்தையும் அருகருகில் பிரசுரித்து பள்ளத்தாக்கின் இரு பக்கங்கள் என ஒப்பிட்டுக் காண்பித்துள்ளன.

ஊடகங்கள் வழக்கமான மூர்க்கத்தனத்தோடு செயல்பட்டு மக்களிடையே பிரிவையும், வெறுப்பையும் உண்டுபண்ணுகின்றன என்று மிகுந்த சினத்தோடு தனது முகநூலில் பதித்துள்ளார்.

இத்தகைய பிரசுரங்கள் ஒருவருக்கு மற்றொருவருடன் விரோத மனப்பான்மையை வளர்க்கும். மக்கள் துக்கித்துக்கொண்டிருக்கும் இந்நிலையில் இதுபோன்ற ஊடகங்களின் செயல்கள் அவர்களது சினத்தையும், விரோதத்தையும் அதிகரிக்கும். கட்டுக் கடங்காத சூழ்நிலை உருவாக ஏதுவாகும். இத்தகைய விரும்பத்தகாத விவாதங்களுக்குத் காரணமாகிவிட்டதை நினைத்துத் தான் வருந்துவதாகவும் பதிவு செய்துள்ளார்.

தான் ஐ.ஏ.எஸ் படித்தது இவ்விதமான கீழ்த்தரமான விவாதத்திற்கு ஆளாவதற்கு அல்ல என்றும், இந்நிலை நீடிக்குமாகில் தான் பணியிலிருந்து விலகுவதைத் தவிர வழியில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரு அரசு தனது பிரஜைகளையே கொன்று முடமாக்க முற்படுமாயின் அது தன்னையே மோசமாக சிதைத்துக்கொள்வதற்குச் சமம் என்று அரசைச் சாடியுள்ளார். உண்மையான சம்பவங்களை எந்த தொலைக்காட்சிகளும் தரப்போவதில்லை, அரசின் விருப்பப்படியே செய்திகள் வெளியாகும் என்று மற்றுமொரு IAS அதிகாரி சௌதர்ய் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க