• Download mobile app
25 Jun 2026, ThursdayEdition - 3788
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிங்கக்குட்டியை அனாதையாக விட்டு சென்ற இளைஞர் கைது

October 13, 2017 தண்டோரா குழு

பாரிஸ் நகரிலுள்ள வீட்டில் ஒரு சிங்கக்குட்டியை அனாதையாக விட்டுவிட்டு சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் வசிக்கும் 24 வயது இளைஞர் ஒருவர், தன்னிடம் ஒரு சிங்கக்குட்டி இருப்பதை பெருமையாக காட்டிக்கொள்ள,விலங்குகாட்சியகத்தில் இருந்து வாடகைக்கு வாங்கியுள்ளார்.பின்னர் அதனுடன் இணைந்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

இதன் பிறகு, பாரிஸ் நகரின் புறநகர் பகுதியில் அந்த இளைஞருக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் அதை அனாதையாக விட்டுவிட்டு சென்றுவிட்டார். அந்த இளைஞர் சமூக வளைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படத்தை கண்ட காவல்துறையினர், அவர் மீது சந்தேகம் அடைந்து அந்த இளைஞரை கைது செய்தனர்.

இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், தன்னிடம் ஒரு சிங்கக்குட்டி இருப்பதை பெருமையாக காட்டிக்கொள்ள, அதை வாடகைக்கு வாங்கியதாகவும், பிறகு அதை அனாதையாக விட்டுவிட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

உடனே காவல்துறை அதிகாரிகள்,தீயணைப்பு படைக்கு தகவல் தந்தனர். தகவலறிந்த அவர்கள், அந்த சிங்கக்குட்டியை மீட்டு, அதை விலங்குகளை பாதுகாக்கும் குழுவினரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து தீயணைப்பு படை ஊழியர்கள் அந்த சிங்கக்குட்டியை மீட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். “காட்டு விலங்குகள் வீட்டிலிருக்கும் பொம்மையோ அல்லது வீட்டில் வளர்க்க கூடிய விலங்குகளோ இல்லை என்று மக்கள் அறிந்துக்கொள்வது மிகவும் அவசியமானது” என்று அந்த புகைப்படங்களுடன் செய்தி அனுப்பினர்.

மேலும் படிக்க