• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் அருகே முடி திருடிய நபர் கைது

July 14, 2016 வெங்கி சதீஷ்

நாட்டுல எவ்வளவோ பிரச்சனை இருக்கு இதுல முடியத் திருடினது எல்லாம் ஒரு பிரச்சனையா என தலைப்பைப் பார்த்து சிரிக்கும் நபர்கள் கீழே உள்ள மேட்டரைப் படித்தால் தான் கைது எதற்கு எனப் புரியும்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் உள்ள மாரியம்மன் கோவில் சுற்றுவட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவிலில் முடிக் காணிக்கை கொடுப்பதாகக் கூறி ஏதேனும் கோரிக்கை வைத்தால் அந்தக் காரியம் உடனடியாக கைகூடும் என்பது ஐதீகம். இதனால் சுற்றுவட்டாரப் பகுதி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இதனால் அங்கு பக்தர்கள் தரும் முடிக் காணிக்கையை மூட்டை மூட்டையாகக் கட்டி பின்னர் விக் தயாரிக்கும் நிறுவனங்களுக்குக் கொடுப்பது வழக்கம்.

இந்நிலையில் சமீபமாக நிர்வாகக்குழுவில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக நடைபெற்ற தணிக்கையின் பொது பழைய முடி மூட்டைகள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து நிர்வாகக் குழுவினர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய இருக்கன்குடி காவல்துறையினர் சுமார் 50 லட்சம் மதிப்பிலான காணிக்கை முடி மூடைகள் திருடப்பட்டதை கண்டுபிடித்தனர்.

மேலும் அதற்கு இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவில் முன்னாள் பரம்பரை அறங்காவலர் குழுத் தலைவர் ராமமூர்த்தி தான் காரணம் என்பதையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து அது குறித்து வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர் நேற்று ராமமூர்த்தியை கைது செய்துள்ளனர்.

மைன்ட் வாய்ஸ்: முடிதானேனு நினைச்சா 50 லட்சம் ரூபாய்க்கு திருடியிருந்தா சும்மாவா விடும் போலீஸ்.

மேலும் படிக்க