October 27, 2017
தண்டோரா குழு
மூத்த மலையாள எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியர் புனத்தில் குஞ்ஞப்துல்லா(77) காலமானார்.
கேரளாவைச் சேர்ந்த பிரபல மலையாள எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியர் புனத்தில் குஞ்ஞப்துல்லா, கடந்த ஒரு ஆண்டு காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்று, இன்று(அக் 27) காலமானார்.
சாகித்திய அகாடமி விருது மற்றும் கேரள சாகித்யா அகாடமி விருதினை இரண்டு முறை வென்றுள்ளார்.மேலும்,’மருஞ்ஞு’, ‘கண்யாவனங்கள்’, ‘கதி’, ‘அலிகர்கதகள்’ போன்ற அவருடைய பல படைப்புக்கள் மிகவும் பிரபலமாமாவை.
புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.