• Download mobile app
21 Oct 2025, TuesdayEdition - 3541
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தென்னிந்தியாவில் குறைவாக சம்பளம் பெறும் காவல்துறை எது தெரியுமா

July 28, 2016 தண்டோரா குழு

தென்னிந்தியாவில் காவல்துறையினருக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்து போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை புள்ளி விவரப்படி தெலுங்கான மாநில போலீஸாரை காட்டிலும் தமிழக போலீஸாருக்கு குறைவான சம்பளம் தான் வழங்கப்படுகிறதாம்.

மகாராஷ்டிரா, சண்டிகர், கோவா, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது தமிழக காவல்துறையினருக்கு மிகவும் குறைவான ஊதியம் தான் வழங்கப் படுகிறதாம். தெலுங்கான மாநில போலீசாரின் கடைநிலை ஊழியருக்கு 16,400 ரூபாய் வழங்கப்படுகிறது.

ஆனால், தமிழக காவல்துறையில் தலைமை காண்ஸ்டெபிளுக்கே 21,230 முதல் 63,100 ரூபாய் வரை தான் சம்பளம் வழங்கப்படுகிறது, அதேசமயம் பணிநிலையில் உள்ள தமிழக போலீஸாருக்கு வெறும் 5,200 முதல் 20,200 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது.

அதாவது தெலுங்கான மாநிலத்தை ஒப்பிடுகையில் மூன்று மடங்கு ஊதியம் குறைவாகும். மேலும், இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்த காண்ஸ்டபிள் வெறும் 18 ஆயிரம் ரூபாய் மட்டுமே பெறுகிறார் என்கிறது புள்ளிவிவரங்கள்.

கடைநிலை ஊழியர்களுக்கு மட்டும் தான் அப்படி என்று பார்த்தால் உயர் அதிகாரிகளின் ஊதியமும் அதே நிலை தான். தெலுங்கான தலைமை காவல்துறை கண்காணிப்பாளருக்கு 40,270 முதல் ரூ.93,780 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் வெறும் 15,600 முதல் 39,100 ரூபாய் வரை மட்டுமே வழங்கப்படுகிறது.

என்னதான் தமிழக காவல்துறையினருக்குக் குறைந்த ஊதியம் வழங்கப்பட்டாலும், நாட்டின் சிறந்த காவல்துறை என்ற பெயர் தமிழக காவல்துறை உண்டு என்பது தான் ஒரு சிறப்பு தான்.

மேலும் படிக்க