• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உள்ளாட்சித் தேர்தலை உரிய நேரத்தில் நடத்தியிருந்தால் மக்களை காத்திருக்கலாம்– டிடிவி தினகரன்

November 26, 2018 தண்டோரா குழு

உள்ளாட்சித் தேர்தலை உரிய நேரத்தில் நடத்தியிருந்தால்,புயலால் இவ்வளவு பெரிய பாதிப்புக்குள்ளாக்காமல் மக்களை காத்திருக்கலாம் என அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

கஜா புயலின் கோரதாண்டவத்தால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான திருச்சி,தஞ்சாவூர்,நாகப்பட்டினம்,திருவாரூர்,புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் அழிவை சந்தித்துள்ளன.தென்னை மரங்கள்,வாழை,கரும்பு உள்ளிட்டவை பெரும் சேதமடைந்துள்ளன.இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.தற்போது தொடர்ந்து மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில்,உள்ளாட்சித் தேர்தலை உரிய நேரத்தில் நடத்தியிருந்தால்,புயலால் இவ்வளவு பெரிய பாதிப்புக்குள்ளாக்காமல் மக்களை காத்திருக்கலாம் என அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“உள்ளாட்சி தேர்தல் உரிய நேரத்தில் நடந்திருந்தால்,உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களோடு சேர்ந்து புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்டிருப்பார்கள்.அதன்மூலம்,மக்கள் இவ்வளவு பெரிய பாதிப்புக்கு உள்ளாகாமல் காத்திருக்கலாம்! என பதிவிட்டுள்ளார்”.

மேலும் படிக்க