September 27, 2016
தண்டோரா குழு
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இல.கணேசனை வேட்பாளராக அறிவித்து பாஜக கட்சி மேலிடம்முடிவெடுத்துள்ளது.
மத்தியப் பிரதேச பாஜக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த நஜ்மா ஹெப்துல்லா மணிப்பூர் ஆளுநராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டதையடுத்து அவரது பதவி காலியானது. இந்நிலையில் பாஜக ஆட்சி நடக்கும் மத்தியபிரதேசத்தில்,இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தமிழகத்தை சேர்ந்த இல.கணேசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவரான இவர் பாஜக தேசிய செயற்குழுவில் தற்போது உறுப்பினராக உள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டதும், மத்திய அமைச்சரவையில் இல. கணேசன் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூடுதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.