• Download mobile app
05 Aug 2026, WednesdayEdition - 3829
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவுக்கு நிவாரண நிதியாக ரூ.21 கோடி ரூபாய்கான காசோலையை வழங்கினார் நீதா அம்பானி!

August 31, 2018 தண்டோரா குழு

கனமழையால் பாதிக்கப்பட்டுள கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக,நீதா அம்பானி 21 கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த தொடர் கனமழை காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது. பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அங்கு மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.தற்போது மழை ஓய்ந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள்.மழையால் சேதமான புகுதிகளில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை 483 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,140 பேர் காணவில்லை என்றும்,தற்போது வரை 305 நிவாரண முகாம்களில் 59,296 பேர் தங்கியிருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.கனமழையால் பாதிக்கப்பட்டுள கேரளாவுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்தும்,திரையுலகத்தை சேர்ந்தவர்களும் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில்,கேரளாவில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடருக்காக ரூ.21 கோடிக்கான காசோலையையும்,ரூ.50 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்களையும் நீதா அம்பானி,திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வழங்கினார்.மேலும் முகாம்களில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.

மேலும் படிக்க