• Download mobile app
07 May 2026, ThursdayEdition - 3739
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவில் முழு அடைப்பு போராட்டம்: கோவையில் பயணிகள் அவதி!

November 17, 2018 தண்டோரா குழு

கேரள மாநிலத்தில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் இயங்காததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

சபரிமலைக்கு செல்ல முயன்ற இந்து கூட்டமைப்பின் கேரள மாநில தலைவர் சசிகலா கைது செய்யப்பட்டதை கண்டித்து,இந்து அமைப்புகள் சார்பில் கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.இதனால் கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகளும், கேரளாவில் இருந்து கோவை வரும் சுமார் 80 பேருந்துகள் இயக்கப்படவில்லை.

உக்கடம் பேருந்து நிலையத்தில் கேரள பேருந்துகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.இன்று அதிகாலை குருவாயூர் சென்ற தமிழக பேருந்து கேரளா எல்லையான வாளையாறு வரை சென்ற நிலையில் திருப்பி அனுப்பப்பட்டது.

மேலும்,ரயிலில் கேரளா சென்றாலும்,அங்கிருந்து தங்களது பகுதிக்கு செல்ல வாகனங்கள் கிடைக்காது என்பதால்,கேரளாவில் இருந்து கோவில்களுக்கு வந்த பயணிகள் உக்கடம் பேருந்து நிலையத்திலேயே மாலை வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க